உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்கள் கல்வியில் அரசியல் கூடாது: கவர்னர் ரவி

இளைஞர்கள் கல்வியில் அரசியல் கூடாது: கவர்னர் ரவி

சென்னை: ''சிந்துார் ஆப்பரேஷன்' வெற்றியை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், கேள்வி எழுப்புகின்றனர்,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.'சென்னை சிட்டிசன்ஸ் போரம்' அமைப்பின் சார்பில், சிந்துார் ஆப்பரேஷன் வெற்றி விழா, தி.நகரில் உள்ள கிருஷ்ணகான சபாவில் நேற்று நடந்தது.

விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை, உலக நாடுகளே ஏற்றுக் கொண்டன. இந்நிலையில், இங்குள்ள சில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்தியா வளர்வதை சிலர் விரும்பவில்லை. அவர்கள் மனநிலை மாற வேண்டும். இங்கு பல மொழிகள், கலாசாரங்கள் இருந்தாலும், இந்தியா என்பது ஒரு நாடு. அதுதான் பாரதம்.போர் என்றால் சில இழப்புகள் ஏற்படும். ஆனால், நாட்டை காப்பதே நம் கடமை. இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். முப்படைகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை, நாம் போற்ற வேண்டும்.தேசிய கல்விக் கொள்கை மிக முக்கியமானது. சிலர் அதை வைத்து அரசியல் செய்கின்றனர். நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் வசம்தான் உள்ளது. அவர்கள் கற்கும் கல்வியில், அரசியல் செய்வது நாகரிகமற்றது.தமிழகத்தில், ஆண்டுக்கு 7,000 பேர் பிஎச்.டி., பட்டம் பெறுகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் தகுந்த திறனுடன் இருப்பதில்லை. அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் மற்றும் கல்வியறிவு வழங்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள், திறன் மிகுந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய கல்வி, வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.இந்தியா யாருக்கும், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. அதேசமயம், பயங்கரவாதிகள் வேருடன் அழிக்கப்படுவர். முன்பிருந்த இந்தியா இப்போது இல்லை. வளர்ந்து வரும் இந்தியா; புதிய இந்தியாவாக மாறி உள்ளது. இவ்வாறு அவர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Abdul Rahim
ஜூன் 02, 2025 17:44

நீ தான் முழு நேர அரசியல் வாதி ஆகிட்டியே .


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2025 17:27

அரசியல் இல்லாமல் நானில்லை எங்கும் அரசியல் எதிலும் அரசியல் எனக்கொரு அரசியல் இருக்கின்றது ஜீவ நதியாய் வரும் அரசியல் என்றும் என்னை காக்கின்றது


M Ramachandran
ஜூன் 02, 2025 12:41

அவர்கள் வசனம் பேசி மூளையை மழுங்க செய்து தானே கட்சியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


Ramesh Sargam
ஜூன் 02, 2025 12:14

எந்த அரசியில் கட்சியினரும் மாணவர்கள் கல்வி விஷயத்தில் தலையிட கூடாது.


venugopal s
ஜூன் 02, 2025 12:09

தமிழக மாணவர்கள் கல்வியில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்யக்கூடாது என்று தான் நாங்களும் சொல்கிறோம்!


மூர்க்கன்
ஜூன் 02, 2025 09:40

போர் என்றால் சில இழப்பு ஏற்படும் ???? அந்த இழப்புகள் ஏன் எந்த அரசியல்வாதி வீட்டிலேயும் இல்ல? போலி தேசபக்தி பேசி அப்பாவிகளுக்கு இழப்பு ஏற்படுத்தும் தற்குறிகளை மக்கள் அடையாளம் காண ஆரம்பித்து விட்டார்கள்.உல்லாச வாழ்க்கை வாழும் இவர்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 02, 2025 08:39

கவர்னர் சொல்றது தப்போ தப்பு.. இளைஞர்கள் பொறுப்பானவர்களாக ஆகி நன்கு கற்று, தொழில் செய்து அல்லது வேலைவாய்ப்பு பெற்று முன்னேறினால் திராவிட மாடலின் தலைமுறை பிசினஸ் - அதாங்க அரசியல் பிழைப்பு - படுத்துரும்.. அதனால இளைஞர்களை மது மற்றும் இறக்குமதி போதைக்கு அடிமையாக்கி அவங்க வாழ்வை நாசமாக்கி இலவசங்கள் என்னும் பெயரால் தூக்கிப்போட்டு கவ்வ வைக்குது திராவிட மாடல்.. அப்படிப்பட்ட அடிமைகளைத்தான் தக்க வைக்க முடியும். உருப்படணும், முன்னேறணும் ங்கிற எண்ணம் இருக்கிறவன் எங்க பின்னாடி வரவே மாட்டான் .....


ramesh
ஜூன் 02, 2025 11:24

தர்மராஜ் அவர்களே இந்தியாவில் முதலாவது படித்தவர்கள் உள்ள கேரளா மாநிலத்தை காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் ஆள்கிறது . இரண்டாவது படித்தமாநிலமான தமிழகத்தை dmk அல்லது admk ஆள்கிறது அவர்களுக்கு இந்த அறிவுரை தேவை இல்லை. படிக்காதவர்கள் உள்ள பிஜேபி ஆளும் மாநிலங்களான உ பி ,மபி , பிஹார் போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு தான் உங்கள் அறிவுரை தேவை


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2025 17:32

8.2 கோடி டாஸ்மாக்கினாட்டு மக்கள் 6.2 கோடி ஒட்டாளர்கள். 1.7 கோடி வோட்டு திமுக 1.5 கோடி அதிமுக 2021 தேர்தலில். ஆள்வது யார் திமுக???ஏன்??? 27% ஒட்டு ஆனால் அந்த கட்சி தான் ஆள்கின்றது


புரொடஸ்டர்
ஜூன் 02, 2025 08:08

ஆளுநர் பதவியில் இருக்கும் நீ அரசியல் செய்வது ஏன் ரவி?


Sundar R
ஜூன் 02, 2025 06:07

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும், பொம்மை ஆட்சியாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஐந்து நிமிடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், காங்கிரஸ் அரசு, பாரதமும், பாகிஸ்தானும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று கூட்டுக் கையொப்பம் போட்டது பாரத மக்களை ஏமாற்றும் செயல். காங்கிரஸ்காரர்களின் தேசபக்தியில் மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் தேசபக்தியில் சந்தேகம் எள்ளளவும் ஐயமில்லை என்று மேதகு ஆளுநர் இதே மேடையில் நேற்று பேசினார்.


மூர்க்கன்
ஜூன் 02, 2025 13:12

பாகிஸ்தான் ஒரு செத்த பாம்பு அதை வைத்து தேர்தல் லாபம் அடைய நினைப்பவர்களின் பாம்பு தோலும் உரியும்.


ராஜா
ஜூன் 02, 2025 04:58

வடக்கன்ஸ் பயிற்சி முடித்து அரசியலில் இறங்கி வேலை செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை