உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொள்ளாச்சி விவகாரம்; முதல்வர் சொன்னதே உண்மை என்கிறார் சபாநாயகர்!

பொள்ளாச்சி விவகாரம்; முதல்வர் சொன்னதே உண்மை என்கிறார் சபாநாயகர்!

சென்னை: பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில், தங்கள் தரப்பு வாதங்களுக்கான ஆதாரத்தை சட்டசபையில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர், சபாநாயகரிடம் கொடுத்தனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சொன்னதே உண்மை என அப்பாவு தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=exujv8gb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது, 'பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்காததால் தான் அதனை பற்றி பேசுகிறோம்' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.இதற்கு,'பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தோம்' என இ.பி.எஸ் பதில் அளித்தார்.உடனே குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், 'காலம் கடந்து எடுத்த நடவடிக்கையை இங்கு பேசுகிறீர்கள். அண்ணா பல்கலை விவகாரத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டும் போராடுவது ஏன்? பொள்ளாச்சியில் இரண்டு ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது. புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான ஆதாரங்களை இன்று சபாநாயகரிடம் கொடுக்கிறேன். இ.பி.எஸ்., சொல்வது உண்மை என்றால், அவர் சொல்லும் தண்டனையை ஏற்க தயார். நான் சொல்வது உண்மை என்றால், இ.பி.எஸ்., நான் சொல்லும் தண்டனையை ஏற்க தயாரா? என்றார்.அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இருவரும் சவால் விட்டுள்ளீர்கள். இருவர் பேசியதும் அவைக்குறிப்பில் பதிவாகி உள்ளது. இத்துடன் முடியுங்கள். இன்று ஆதாரத்தை வழங்குங்கள் என்றார். அதன்படி, ஆதாரங்களை சட்டசபையில் இன்று (ஜன.,11) அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தங்கள் தரப்பு வாதங்களுக்கான ஆதாரத்தை சமர்ப்பித்தனர்.சபாநாயகர் அலுவலகத்தில் இரு கட்சிகளின் சார்பிலும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

சபாநாயகர் விளக்கம்

இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சொன்னதே உண்மை. முதல்வர் சொன்னது அனைத்தும் உண்மை என ஆதாரங்களில் தெரிய வருகிறது. இருதரப்பும் ஆதாரம் கொடுத்ததில், முதல்வர் ஸ்டாலின் கூறியது உண்மை என தெரிய வருகிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்தது 12 நாட்களுக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் சகோதரர் புகார் அளித்தும் அதை வழக்காக பதிவு செய்யவில்லை. இரண்டு பேர் ஆதாரத்தையும் நான் பார்த்துவிட்டேன். நான் சொல்வது தான் தீர்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

AMLA ASOKAN
ஜன 12, 2025 09:36

ஒரு பெண்ணின் அனுமதியின்றி , விருப்பமின்றி , வலுக்கட்டாயமாக அவளுடன் உடல் உறவு கொள்வது தான் கற்பழிப்பு . ஒரு பெண்ணின் மீது உடல்ரீதியாக தொடுவது , தொந்தரவு கொடுப்பது மானபங்கம் . இவ்விரண்டு குற்றங்களும் வெவேறு தண்டனைக்குரியவை . சென்னை பெண்ணுக்கு 25 லட்சம் , பொள்ளாச்சி பெண்களுக்கு இழுத்தடிப்பு . நீதிமன்றம் தான் நிவாரணமும் நிர்ணயிக்கும் , தண்டனையும் வழங்கும் . நீதிமன்ற படிகள் ஏறிவிட்டால் ஆண்டுக்கணக்கில் பொறுமை , அமைதி காக்க வேண்டும் .


pv, முத்தூர்
ஜன 12, 2025 05:49

நெல்லை ஜெயக்குமாரை செம்பாவு மறந்துவிட்டார் போல்


Ram pollachi
ஜன 12, 2025 00:28

ஏன் நண்பா மானபங்கம் என்றால் என்ன? கற்பழிப்பு என்றால் என்ன? ஒரு முறை என்றாலும் பல முறை என்றாலும் தவறு தவறு தான்... பிறகு ஏன் ஒரே ஒரு பெண்ணுக்கு மதுரை நீதிமன்றம் ரூபாய் இருபத்து ஐந்து இலட்சம் இடைக்கால நிவாரணம் கொடுக்க சொன்னது மற்ற பெண்களுக்கு இந்த சலுகை ஏன் கிடைக்கவில்லை.... நிவாரணம் வேண்டாம் நீதி வேண்டும் என்று கேட்க துணிவு உண்டா?


AMLA ASOKAN
ஜன 11, 2025 21:46

அண்ணா யூனிவர்சிட்டி சம்பவம் ஒரு இரவு நேரத்தில் , ஒரு பெண்ணின் காதல் மோகத்தால் , தனிமையில் , புதர் அருகில் ஒரு கயவனால் ஏற்பட்ட மானபங்கம் . ஆனால் பொள்ளாச்சி நிகழ்வு பல காம வெறியர்களால் பட்டப்பகலில் பல இளம் பெண்கள் பல மாதங்கள் கற்பழிக்கப்பட்ட கொடுமையான சம்பவம் . அதற்கு EPS சரியான நடவடிக்கையை உடன் எடுக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை . தேர்தல்களில் தான் தோல்வி என்றால் சட்டசபையிலும் தோல்வி . ஈரோட்டிலும் புறமுதுகு காட்டி ஓடி ஒளிகிறார் . அதிமுகவிற்கு தொடர் சரிவு .


என்றும் இந்தியன்
ஜன 11, 2025 18:53

சப்பை நாயக்கர் என்று இந்த பதவி பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் இந்த கிறித்துவனின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும்


Dharmavaan
ஜன 12, 2025 08:31

... என்பதே சரி


Nandakumar Naidu.
ஜன 11, 2025 17:18

இவர் சபா நாயகரா? இல்லை, விளங்காத ஆட்சிக்கு சப்பை கட்டும் நாயகரா?


ஆரூர் ரங்
ஜன 11, 2025 16:29

விட்டுடுங்க. இந்த அப்பாவி அடுத்த தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்க வேண்டாமா? இன்னும் பத்தே மாசம் நிம்மதியா இருக்க விடுங்க.


M Ramachandran
ஜன 11, 2025 16:08

இப்படியெ ஜால்றா தட்டி கொண்டிருந்தால் காங்கரஸ் காரன் என்ற பெயர் போய் தீ மு க்க காரன் என்று பெயர் மாறி விடும் அப்போ காங்கரஸ் காரர்கள் உங்களுக்கு அடுத்த முறை நிறுத்த எதிர்ப்பு கொடுப்பார்களே அப்போ ஒரு தீ மு கா அனுதாபி என்று செட்டில்மென்ட் வாங்கி செட்டில் ஆகா போகிறீர்களா


Haja Kuthubdeen
ஜன 11, 2025 16:01

நாட்டாம தீர்ப்பு சொல்லிட்டார்...


Ram pollachi
ஜன 11, 2025 14:01

பொள்ளாச்சி சம்பவத்தை வைத்து ஆட்சியை பிடித்த தாங்கள் அதே போன்ற தவறு சென்னையில் நடக்கும் போது நல்ல வியாக்கானம் பேசுவது ஏற்புடையது அல்ல.... பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தொடர்பு முதல் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் வரை எத்தனை நாடகம், நடிப்பு இதை நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.... முழு விபரமும் இங்கு உள்ளவர்களுக்கு தெரியும் ஆனால் தகவல் தொடர்பு சாதனங்கள், பத்திரிக்கைகள் உண்மையை தவிர கற்பனை குதிரை யை தட்டி எழுப்பி தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டார்கள்.... இந்த சம்பவத்தை கண்டித்து காந்தி சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அன்றைய எதிர் கட்சிகள் இறுதி நேரத்தில் செய்த கூத்துக்கள் தான் என்னை போன்ற பலரை முகம் சுழிக்க வைத்தது..... காலில் பட்ட அசிங்கத்தை தலையில் பட்டதாக தகவல்களை பரப்பி மொத்த ஊரின் மானத்தையும் கப்பலில் ஏற்றி விட்டார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை