உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன் மாணிக்கவேல் வழக்கு; உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு

பொன் மாணிக்கவேல் வழக்கு; உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக சி.பி.ஐ., பதிந்த வழக்கில், முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரி முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மனு தாக்கல் செய்ததில் நிபந்தனையை நிறைவேற்றி விட்டதால், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்தது தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன்மாணிக்கவேல் பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார். பணிக்காலத்தில் சென்னை, ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார்.அவரது வாக்குமூலம் அடிப்படையில் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு எஸ்.ஐ., சுப்புராஜை, 2017ல் கைது செய்தனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின் ஜாமினில் வெளியே வந்தனர்.'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்தார்.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டில்லி சி.பி.ஐ., போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர்.உயர் நீதிமன்ற கிளை, 'சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் நான்கு வாரங்களுக்கு தினமும் ஆஜராக வேண்டும்' உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆக., 30ல் அவருக்கு முன்ஜாமின் அனுமதித்தது. பொன்மாணிக்கவேல், நிபந்தனையை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, “நிபந்தனையை ஏற்கனவே மனுதாரர் நிறைவேற்றி விட்டார். நிபந்தனைக்குரிய கால வரம்பு முடிந்துவிட்டது. இவ்வழக்கு முடிக்கப்படுகிறது,” என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rajamani Ksheeravarneswaran
அக் 16, 2024 11:38

அவர் பல பெரியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார் .குறிப்பாக மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை திருடு போய் ஆஸ்திரேலியில் 70 கோடிக்கு விற்கப்பட்டது .விற்றவர் பெரிய தொழிலதிபர் .மேலிடம் சும்மா இருக்குமா ? சிபிஐயை ஏவிவிட்டது .


Paramasivam
அக் 16, 2024 10:55

பொய்வழக்கு போட்டவன் பேரைக் கேட்டாலே தெரியவேண்டாமா அவன் எப்படிப்பட்டவன் என்று. நீதிமன்றம் தவறு செய்கின்றதா?


K V Ramadoss
அக் 16, 2024 02:04

வர வர நீதி மன்றத்தின் தீர்ப்புகள் குழப்புபவைகளாக இருக்கின்றன. மாணிக்கவேல் உண்மையாக, நேர்மையாக செயல்பட்டவர் என்று ௭ல்லோருக்கும் தெரியும். அவருக்கு ௭திராக ஒரு தீயவன் புகார் கொடுத்தால் அதன் உண்மையை ஆராயாமல் அவர் மேலும் வழக்கு பதிவு செய்வதா ? இப்படியே போனால் யாரும் நேர்மையாக இருக்க விருப்பப்படமாட்டார்கள்.


என்றும் இந்தியன்
அக் 15, 2024 16:50

இப்போது இந்தியாவில் நீதிமன்றம் இல்லவே இல்லை ஏதோ ஒரு கஸ்மால மன்றம் இருக்கின்றது. ஒரு வழக்கு முடியஎடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது 25 வருடம். இந்த வழக்கில் வெறும் ஜாமீன் வழக்கு முடிந்தது ஆனால் வழக்கு தீர்வு வரவில்லை???2017 வழக்கு இன்னும் இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை. ஒரு சிறிய வழக்கு. வழக்கு - சர்வ தேச சிலை கடத்தல்காரர் கைது. என்னிடம் நீதித்துறையை கொடுத்திருந்தால் தீர்ப்பு இப்படி இருந்திருக்கும். 2017 டிசம்பரில் தீர்வு "தீனதயாளன் குற்றவாளி. அவர் சர்வதேச சிலை கடத்தல்காரராக இருப்பதால் அவருக்கான தீர்ப்பு "தவறு கண்டேன் சுட்டேன் சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம்????


Ms Mahadevan Mahadevan
அக் 15, 2024 16:08

காவல் துறையினர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி ஆக்கி உள்ளே போட்டுவிடும் உதாரணம் கேரளா இஸ்ரோ விஞ்ஞானி


Gunasekaran V
அக் 15, 2024 14:52

நிபந்தனை ஜாமீன் தொடர்பான வழக்கு தானே முடித்து வைக்கப் பட்டிருக்கிறது?


Apposthalan samlin
அக் 15, 2024 12:41

cpi சென்ட்ரல் கோவேர்ந்மேன்ட் அல்லவா எப்படி போன் மாணிக்கவேலு மீது வழக்கு ? தப்பு செய்து irubaro


Rajappan Perumal
அக் 15, 2024 08:55

சத்தியத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் ஜெயிக்கும் ஆகையால் தவறு செய்தவன் தண்டனை பெறுவான் பொன்மானிக்கவேல் நியாயமாக அவர் பதவிக்காலத்தில் வாழ்ந்தார் அவர் சென்னை போரூரில் ஆவடி போலிஸ் சரகம் DSP யாக பணி புரிந்தவர் என்பது எனக்கு நன்றாக தெரியும்


RADHAKRISHNAN
அக் 15, 2024 08:42

காதர்பாட்ஷா திட்டமிட்டு பொண்மாணிக்கம் மீது பழிசுமத்தி தப்பிக்க பழிதீர்க்க இதை செய்பிறார்


Kalyanaraman
அக் 15, 2024 07:53

நேர்மையான காவல் அதிகாரிகளில் திரு பொன் மாணிக்கவேல் அவர்களும் ஒருவர். நமது சட்டங்கள் இவர் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு கவசமாக இருக்க வேண்டும்.


முக்கிய வீடியோ