உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுத் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ 2024-2025ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள். 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ம் நிதியாண்டில் மாத குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கப்படும். 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

VENKATASUBRAMANIAN
ஜன 01, 2026 19:52

எலும்பு துண்டு போட்டால் போதும் என்று திமுக நினைக்கிறது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு எல்லா பொய்களையும் அவிழ்த்து விடுவார்கள்


N S
ஜன 01, 2026 19:52

இன்னும் பல அப்பாவின் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் தேர்தல் அறிவிப்பு வரும்வரை. தூய்மை பணியாளர்களுக்கு சென்னையில் சாப்பாடு திட்டம் போன்று. ஜாலி தான்.


Panneerselvam Jayaraman
ஜன 01, 2026 16:47

இது ஒன்றும் புதிது அல்ல இது வருட வருடம் கொடுப்பதுதான் இதில் ஒன்றும் ஆச்சிரியமோ புதிய மகிழ்ச்சி செய்தி அல்ல


D Natarajan
ஜன 01, 2026 16:40

ஒரு தொழிலில் கிடைக்கும் லாபத்தில் தான் போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும். ஆனால் லஞ்சத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்களுக்கு எதற்கு போனஸ். கேடு கேட்ட அரசு. எல்லாம் எலக்ஷன் படுத்தும் பாடு


Keshavan.J
ஜன 01, 2026 16:03

முதலில் சம்பளம் கொடு அப்பறம் போனஸ் தா...


Murthy
ஜன 01, 2026 14:55

தேர்தல் வருகிறது தேர்தல் வாக்குச்சாவடிக்கு இந்த அரசு ஊழியர்கள்தான் வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள்....அவர்களை விலைக்கு வாங்கும் முயற்சி


ram
ஜன 01, 2026 14:49

முதல்லே வாழ்த்து சொல்லும்...


sundarsvpr
ஜன 01, 2026 13:52

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு வழங்குவது அரசின் முடிவு. சரி. நன்றாக வேலைசெய்பவர் குறைந்த திறமை உள்ளவர் தண்டனை பெற்றவர்கள் இருப்பார்கள். இதனை இவ்வாறு நிர்ணயம் செய்து வழங்கினால் 100 % போனஸ் பெற அரசு ஊழியர்கள் முயலுவார்கள். நன்றாக வேலைசெய்பவர்கள் 100% குறைந்த திறமை உள்ளவர்கள் 60% தண்டனை பெற்றவர்கள் 25% இப்படி நிர்ணயம் செய்வது கடினம் என்றாலும் ஒழுக்கம் இன்மையால் தண்டனை பெற்றவர்களுக்கு 25% என்று நிர்ணயம் செய்யலாம். அரசு பணியாளர்கள் நல்லவர்கள் திறமையானவர்கள் என்பதனை மறுக்கமுடியாது. லட்சத்துக்கு 10 நபர்கள் மோசமாய் இருக்கலாம். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் அரசு பணியாளர்களை நம்பிக்கையோடு அணுகுங்கள். அமைச்சர்களும் அரசு பணியாளர்களே. இவர்களுக்கு எல்லைக்கோடு தேவை


Vasan
ஜன 01, 2026 13:41

எனக்கொரு சந்தேகம். அமைச்சர்களும் அரசு ஊழியர்கள் தான். அவர்களுக்கும் இந்த 3000 ரூபாய் பொங்கல் பரிசு உண்டல்லவா ?


HoneyBee
ஜன 01, 2026 13:29

ஓட்டுக்காக பிச்சை போடறாங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை