வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிங்க் கலர் மகளிர் பேருந்துகள் விழாக்கால சிறப்பு பேரூந்துகளாக மாறிவிடும். விலையில்லா பயண பயனாளிகளுக்கு கஸ்டம் பாவம்
மேலும் செய்திகள்
தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்
09-Oct-2025
சென்னை: அரசு விரைவு பஸ்களில், பொங்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு விரைவு பஸ்களில், 90 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வரும் 2026 ஜன., 14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்வர். அவர்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவு பஸ்களில் முன்பதிவு அதிகம் இருந்தால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்கள் அறிவிப்பு, ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். அரசு போக்குவரத்துக் கழகத்தின், www.tnstc.inஎன்ற இணையதளம் அல்லது அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிங்க் கலர் மகளிர் பேருந்துகள் விழாக்கால சிறப்பு பேரூந்துகளாக மாறிவிடும். விலையில்லா பயண பயனாளிகளுக்கு கஸ்டம் பாவம்
09-Oct-2025