உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் சாதகமான முடிவு; டங்ஸ்டன் சுரங்கம் குறித்து அண்ணாமலை உறுதி

விரைவில் சாதகமான முடிவு; டங்ஸ்டன் சுரங்கம் குறித்து அண்ணாமலை உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்தார். பின்னர், அவர் விரைவில் சாதகமான முடிவு வரும் என உறுதி அளித்தார்.

அவரது அறிக்கை:

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று நாம் ஏற்கனவே விடுத்த கோரிக்கை தொடர்பாக, மதுரை மாவட்ட சகோதர சகோதரிகள் சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் நானும் இன்று டில்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்துப் பேசினோம்.அவர், எங்கள் கோரிக்கைகளையும், தி.மு.க., அரசு வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை கொடுத்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புக்கு வழிவகுத்தது குறித்தும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். மேலும், சுரங்கம் அமைக்க ஒப்பந்தம் அறிவிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளின் காலவரிசையை எங்களுக்கு விரிவாக விளக்கியதுடன், மக்களின் நலன் சார்ந்த சாதகமான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் மனதில் கொண்டவர். எனவே, அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளின் இன்னல்களுக்கு, நிச்சயம் சாதகமான தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

அப்பாவி
டிச 13, 2024 08:34

அடைக்க வேண்டியதை அடைச்சு தொடைக்க வேண்டியதை தொடைச்சா கிடைக்க வேண்டியது கிடைச்சிடும்


venugopal s
டிச 13, 2024 05:08

இந்த விஷயத்தில் அண்ணாமலை அரசியல் செய்து ஆதாயம் தேடாமல் தமிழகத்துக்கு நல்லது செய்வது போல் நடிப்பதைப் பார்த்தால் திமுக மீது சுமத்தப்பட்ட புகார்கள் எல்லாம் பொய் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது!


Krishna R
டிச 12, 2024 23:30

போ....


வைகுண்டேஸ்வரன்
டிச 12, 2024 21:23

"மக்களின் நலன் சார்ந்த சாதகமான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்". வழவழா ன்னு வெண்டைக்காய் மோர் குழம்பு மாதிரி ஒரு அறிக்கை.


வைகுண்டேஸ்வரன்
டிச 12, 2024 21:22

மீத்தேன் விவகாரத்தில் எச் ராஜா சொன்னது "மீத்தேன் கிடைக்கும் இடத்தில் தான் எடுக்க வேண்டும்" இதை சொல்லும் போது கூடவே அவரோட அநாகரிக adjectives சேர்த்து சொன்னார். இப்போ என்ன சத்தமே காணும்? 6+6 மாத சிறைத் தண்டனைக்கு பயந்து அப்பீல் தயார் பண்றதில் பிசியோ?


ghee
டிச 13, 2024 09:09

அப்போ அந்த நீட் ரத்து கூட புறுடவா


Sudha
டிச 12, 2024 20:51

அதாவது அண்ணாமலை கேட்டுக்குக்கொண்டதற்கிணங்க திட்டம் அரோகரா


T.sthivinayagam
டிச 12, 2024 20:31

திட்டங்களை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? சுயநலமா பொது நலமா!


தாமரை மலர்கிறது
டிச 12, 2024 19:56

டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்திற்கு மிகவும் அவசியம். வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பொருளாதாரத்தை வளர்க்கும். பணம் மரத்தில் காய்க்காது. ஈகோ பிரச்சனையால் ஒரு சிலர் டங்ஸ்டன் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அனைவரின் கருத்தையும் ஏற்றுக்கொண்டு அரசை நடத்தமுடியாது. டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்திற்கு வரும். இதை யாராலும் தடுக்க முடியாது.


சாண்டில்யன்
டிச 12, 2024 23:20

சம்பந்தப்பட்ட ஊர் மக்கள் எதிர்த்தால் மசிய மாட்டார்கள் மாநில அரசு எதிர்த்தாலும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தாலும் நோ ரெஸ்பான்ஸ் அத அண்ணாமலை சொல்லணும் எல் முருகன் வந்து சொன்னா ஒடனே ஏற்றுக் கொள்ளப்படுமாம் இப்படியொரு கேவலமான அரசியல் இதேபோல பரந்தூர் விமான நிலையத்தை கொண்டாங்கப்பா அந்த ஊர்மக்கள் வெற்றி வெற்றின்னு துள்ளிக் குதிக்கறாங்களா பார்க்கலாம்


Ramesh N
டிச 12, 2024 18:26

Looks like no one is talking about benefits of Tungsten mining. Tamil nadu also lost out on hydrocarbons and sterlite. We are sacrificing technology to politics.There is no discussion of cost benefit analysis. Some group pros development and thats it. End of the project.


Madras Madra
டிச 12, 2024 17:50

அண்ணாமலைக்கு இதெல்லாம் தேவையா ? சுரங்கம் வந்திருந்தால் இந்த ஆட்சியே கவிழ்ந்திருக்குமே வாய்ப்பு தவறியதே


முக்கிய வீடியோ