உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதுநிலை மருத்துவ படிப்பு கட்டண விபரங்கள் வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்பு கட்டண விபரங்கள் வெளியீடு

– நமது நிருபர் –: சுயநிதி கல்லுாரிகளில் முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான, கல்வி உள்ளிட்ட இதர கட்டணங்கள் மற்றும் உதவித்தொகை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள, 23 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மூன்றாம் சுற்று கலந்தாய்வு, வரும் டிசம்பர் மாதம் நடக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்பாகவே, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலை தங்களது கல்விக் கட்டணம், விடுதி, உணவு மற்றும் இதர கட்டண விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இணையான உதவித்தொகையை, தனியார் கல்லுாரிகளும் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள, 23 தனியார் மருத்துவ கல்லுாரிகள் தங்களது கட்டண விபரங்களை சமர்ப்பித்துள்ளன. இதில், கல்விக் கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணம் மட்டுமே கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டது. விடுதி, உணவு, போக்குவரத்து மற்றும் பிற கட்டணங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டண விபரங்கள் மற்றும் உதவித்தொகை குறித்த சந்தேகங்களுக்கு, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை