உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தபால் அலுவலக குறை தீர்வு முகாம்

தபால் அலுவலக குறை தீர்வு முகாம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 11,832 தபால் அலுவலகங்களில், வாடிக்கையாளர் குறை தீர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. குறைகள் இருந்தால், வரும், 17ம் தேதிக்குள் மனு அனுப்பலாம். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், வட்ட அளவில் வாடிக் கையாளர் குறை தீர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 11,832 தபால் அலுவலகங்களில் சேவை பெறும், அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம். தபால் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவது தொடர்பான, தங்களின் கருத்துக்களை, 'அஞ்சல் குறை தீர்ப்பு' என்ற தலைப்புடன், உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், தமிழக வட்டம், சென்னை- 600002 என்ற முகவரிக்கு வரும், 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை, DAK ADALAT pg.indiapost.gov.inஎன்ற 'இ - மெயில்' முகவரிக்கும் அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை