உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு எதிரான போஸ்டர் கிழிப்பு

முதல்வருக்கு எதிரான போஸ்டர் கிழிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.வினர் ஒட்டிய போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழி திட்டத்தை அமல்படுத்துவதற்கு, தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ., சார்பில், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை நகர் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், 'முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இன்னும் எத்தனை காலத்திற்கு மொழி உணர்வை துாண்டி அரசியல் செய்வீர்கள்? நீங்கள் உங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி திட்டம். உங்கள் குடும்பத்து மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மும்மொழி திட்டம். அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழி திட்டம். எங்கள் ஏழை மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மும்மொழி திட்டம் மறுப்பது ஏன்? ஊருக்குதான் உபதேசமா? மக்கள் விழித்துக் கொண்டார்கள்'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.இந்த போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டன.அதிர்ச்சி அடைந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் ஊர்வலமாக சென்று, போஸ்டரை கிழித்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

NAGARAJAN
பிப் 20, 2025 20:19

தமிழகத்தை தொடர்ந்து ஏமாற்றி அயோக்கியத்தனம் செய்யும் மத்திய அரசு. . இதற்கு தமிழக பாஜகவும் ஜால்ரா. .


RAMESH
பிப் 20, 2025 13:25

ஊபியின் கோழை தனம்


Bala
பிப் 20, 2025 13:08

தமிழகத்தை வஞ்சிக்கும் திமுக, தமிழகத்தை ஏமாற்றும் திமுக, ஒட்டுமொத்தமாக தமிழக ஏழை மக்களை டாஸ்மாக் மற்றும் கஞ்சாவின் குழியில் தள்ளும் திமுக 2026 சட்டசபை தேர்தலில் தூக்கி எறியப்படும். தமிழக மக்கள் பலமான எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களித்து திமுகவை மண்ணை கவ்வ வைப்பார்கள்


Anand
பிப் 20, 2025 12:09

முதல்வருக்கு படிக்க தெரியாத எந்த விஷயமும் அவரோட தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..


தமிழ்வேள்
பிப் 20, 2025 11:06

யோக்கியன் பக்திமான் நேர்மையாளன் எல்லோரும் தமிழனைப் பொறுத்தவரை எதற்கும் லாயக்கு அற்ற கேணைகள் மட்டுமே.. இந்த மாநிலம் உருப்பட வேண்டுமானால் முதலில் தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிப்பது மட்டுமே முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியது அவசியம்


Yes your honor
பிப் 20, 2025 10:24

எனக்கு ஒரு டவுட். இந்த போஸ்டரை அப்படியே அரைப்பக்க விளம்பரமாக வெளியிட்டால் காசுக்கு ஆசைப்படும் ஜால்றா ஊடகங்கள் அந்த விளம்பரத்தை வெளியிடுவார்களா அல்லது தங்களது விசுவாசத்தை தூக்கிப்பிடிப்பார்களா? எனக்கென்னவோ காசுதான் ஜெயிக்கும் என்று தோன்றுகிறது.


angbu ganesh
பிப் 20, 2025 10:10

முதல்வரான என்ன அர்த்தம் தெரியுமா முதல்வரே எல்லாத்திலேயும் நல்ல விதமா நடக்கறது, எப்படி நாட்டை ஆளணும்னுன்ற நல்ல அறிவு? திறன் படைத்தவர், வீரம்? விவேகம், நாலைந்து மொழிகளை நாட்டு மக்களுக்கு தெரிய வைத்து அவர்கள் கடல் கடந்து போனாலும் பிழைத்த கொள்ளலாம்ன்ற நல்ல எண்ணம் ? அதெல்லாம் அனைத்து மக்களையும் அவர் ஹிந்துவாகட்டும், முஸ்லீம் ஆகட்டும், கிறிஸ்டியன் ஆகட்டும் அரவணைத்து அனைவரையும் ஒன்றாக நினைத்து வாழ வைக்க வேண்டும், இன்னும் ரொம்ப இருக்கு இதுல ஒரு தகுதி கூட இல்லாத உங்களை நாங்க ஏன் முதல்வரை ஏதுக்கனும்


Kumar Kumzi
பிப் 20, 2025 10:08

தமிழில் எழுதி குடுத்த துண்டுசீட்டையே வாசிக்க தெரியாத ஓங்கோல் திராவிஷ விடியலுக்கு கோவம் வர தானே செய்யும்


RAAJ68
பிப் 20, 2025 09:33

PREMJI அவர்களுக்கு.... பின்னர் ஏன் போஸ்ட்டரை கண்டு அஞ்சுவது ஏன்? எதற்கு கிழிக்கிறார்கள்?


angbu ganesh
பிப் 20, 2025 10:00

ஆட்சி செஞ்சி கிழிச்சது போதும்னு இப்போ போஸ்டரை கிழிக்கறானுங்க அராஜக ஆட்சி வெள்ளைக்காரனே பரவா இல்ல இந்த கேடு கேட்ட அரசாங்கம் என்னிக்கு ஆழியுமோ


vadivelu
பிப் 20, 2025 09:15

வாய் கிழிய கருத்து சுதந்திரம் பற்றி பேசுவார்கள்.. ஆட்ட போடுவது ஒன்றே குறியாக இருப்பபவர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை