உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தபால்காரர் வெட்டிக் கொலை

தபால்காரர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி:நெல்லையில், தபால்காரர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.நெல்லையை அடுத்துள்ள, தச்சநல்லூரைச் சேர்ந்தவர் பெரியசாமி,40. தபால்காரர். நேற்று பகல் ஒரு மணியளவில், தச்சநல்லூர் ரயில்வே கேட், பாலாஜி அவென்யூ பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல், அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே, அவர் பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து, தச்சநல்லூர் போலீசார் விசாரித்தனர்.கடந்த 2008ல், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன்களுக்கும், பெரியசாமி தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் முன் விரோதத்தில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, தெரிய வந்தது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி