உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுவது ஜனநாயகம் அல்ல

உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுவது ஜனநாயகம் அல்ல

தமிழக மீனவர்கள், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுகின்றனர். தமிழக மீனவர்களை, இந்திய மீனவர்களாக மத்திய அரசு எண்ணுவதில்லை. அவர்களையும் இந்திய மீனவர்களாக கருத வேண்டும். அப்படி கருதினால்தான், பிரச்னையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தும். இந்தியா - -இலங்கை வெளியுறவு கொள்கை என்பது, தமிழக மீனவர்களின் நலனையும், கச்சத் தீவை மீட்பதாகவும் அமைய வேண்டும் என்று, வலியுறுத்தினாலும் அதை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. தமிழகத்தின் அனைத்து ஜனநாயக சக்திகளும் சேர்ந்து இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 5 ஆண்டு நிறைவடைந்தவுடன் தேர்தலை நடத்த வேண்டும். அதேபோல, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் முடிந்ததும் தேர்தல் நடத்தலாம். எக்காரணம் கொண்டு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது நல்ல ஜனநாயகம் அல்ல. திருமாவளவன், தலைவர், வி.சி.,கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை