மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
55 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 28
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 12
மதுரை : மதுரை மாவட்டம் தென்கரை ஊராட்சி நாராயணபுரத்தில், தாமரை ஊற்று ஊரணி நீரை மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக மக்கள் பயன்படுத்துகின்றனர். இதை சமூக விரோதிகள் அசுத்தப்படுத்துகின்றனர். இந்த ஊரணியில் தாமரை மலர்கள் நிரம்பியுள்ளன. நாகமலை அடிவாரத்தில் ஆண்டு முழுவதும் சுணை நீர் உற்பத்தியாகி, தாமரை ஊற்று ஊரணியை அடைகிறது. மலையில் மூலிகைகள் உள்ளதால், இந்நீரில் மருத்துவ குணம் உண்டு. பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகிறது என மக்கள் நம்புகின்றனர். மதுரை மற்றும் பிற மாவட்ட மக்கள் இந்த நீரை கேன், பாட்டில்களில் எடுத்து செல்கின்றனர். சமீபத்தில், ஊரணியை ரூ.5 லட்சத்தில் சீரமைத்தனர். ஆனால் தற்போது படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை விட்டுச் செல்கின்றனர். புதிதாக கட்டியுள்ள சிமென்ட் தொட்டியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தண்ணீரை விளை நிலத்திற்கு பாய்ச்சுகின்றனர். சிலர் அசுத்தம் செய்கின்றனர். இதனால், வெகு தூரத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல வரும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். ஊரணியை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். சமூக விரோதிகளை ஊராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும். இதன்மூலம், ஊரணியின் புனிதம் காக்கப்படும்.
55 minutes ago | 2
3 hour(s) ago | 28
6 hour(s) ago | 12