உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான படை தளங்களுக்கு மின் வினியோகம்: தமிழகத்தில் உரிமம் கேட்கிறது ராணுவம்

விமான படை தளங்களுக்கு மின் வினியோகம்: தமிழகத்தில் உரிமம் கேட்கிறது ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மின் வாரியம் மட்டுமே, மின் வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிலையில், முதல் முறையாக தாம்பரம், தஞ்சை விமான படை தளங்களுக்கு மின் வினியோகம் செய்யும் உரிமம் வழங்குமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், ராணுவத்தை சேர்ந்த மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் அனுமதி கேட்டுள்ளது.தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, விவசாயம் உட்பட, 3.36 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இவை அனைத்துக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.இந்நிலையில், தாம்பரம் மற்றும் தஞ்சை விமான படை தளங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை, மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, மின் வினியோகம் செய்வதற்கு உரிமம் வழங்குமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் அனுமதி கேட்டுள்ளது.இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் மின் வாரியத்துக்கு அடுத்து, மின் வினியோகம் செய்யும் உரிமையை பெற்ற முதல் நிறுவனமாக, மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் திகழும். ராணுவத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, இந்நிறுவனம் செய்து வருகிறது.இதுகுறித்து, ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வினியோக உரிமம் கேட்கும் நிறுவனம், தன் இணையதளத்தில் அந்த தகவலை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். பின், அந்த தகவல்கள் அடங்கிய விபரங்களை மனுவாக ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, முடிவு எடுக்கப்படும். ஆனால், ராணுவ இணையதளம் அதிக பாதுகாப்பு உடையது என்பதால், தங்களின் மனுவை ஆணைய இணையதளத்தில் வெளியிடுமாறு, மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் வலியுறுத்தியது; அதன்படி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அம்மனுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Radhakrishnan Ganapathy
டிச 20, 2024 12:23

நம்ம நாட்டு இராணுவத்துக்கு மின்சாரம் கொடுப்பதற்கு எதுக்கு கருத்து கேட்பது. தாரளமாக மின்சாரம் வழங்கலாம்


Sundar R
டிச 20, 2024 11:39

ஊழலை ஒழிக்க என்ன வழி?


Kasimani Baskaran
டிச 20, 2024 10:49

நல்லது. இராணுவமாவது இவர்கள் அடிக்கும் கொள்ளையில் இருந்து தப்பிக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 20, 2024 10:18

எங்க எசமான் சீனா கோவிச்சுக்கிடுவாருங்களே ???? அப்பவே அழைப்பிதழில் சீனக் கொடியைப் போட்டு எங்க விசுவாசத்தைக் காமிச்சப்ப சீனா சந்தோசப்பட்டிச்சு ..... இப்போ அதை மனசுல வெச்சுக்கினு கோர்த்து உட பார்க்குதே ராணுவம் ????


Varadarajan Nagarajan
டிச 20, 2024 09:44

தனியார்துறை அனுமதிப்பால் தொழில் போட்டியால் அரசுத்துறை நிறுவனங்கள் தங்களது நிர்வாக திறமையை மேம்படுத்தி ஆயுள்காப்பீட்டு நிறுவனம்போல் சிறந்துவிளங்குவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். ஆனால் பல அரசுத்துறையில் போட்டி என்பது இல்லாமல் ஏகபோகமாக இருப்பதாலும், நிர்வாக கோளாறுகளாலும் நஷ்டத்தில் தத்தளிக்காமல் இருக்க ஆரோக்கியமான போட்டி தேவை. அதோடு ரயில்வே, ராணுவம், தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்கு தற்போதுள்ள நடைமுறையிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்கவேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளிலிருந்து விளக்கு அவசியம். அவர்கள் பொதுமக்களுக்கு மின்விநியோகம் செய்ய அனுமதிகேட்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எதெற்கெல்லாமோ மற்ற மாநிலங்களை மேற்கோள் காட்டும் தமிழக அரசு மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொது மின் விநியோகத்தில் அரசுத்துறையோடு மற்ற தனியார் நிறுவனங்களும் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும் தனியாரை அனுமத்திக்க எத்தனை காலத்திற்கு மறுப்பது. சீர்மிகு ஆட்சிகளால் நமது தமிழக மின் பகிர்மான கழகத்தின் கடன்சுமை மென்மேலும் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.


T Jayakumar
டிச 20, 2024 08:48

இராணுவம், ரெயில்வே துறைகளுக்கு அனுமதி கொடுக்கலாம்.


GMM
டிச 20, 2024 08:09

பாதுகாப்பு , பராமரிப்பு கருதி, விமான படை தளம்களுக்கு மின் விநியோகம் செய்யும் உரிமம் - MES - யிடம் உடன் வழங்க வேண்டும். மேலும் மின் விநியோகம் செய்யும் உரிமை மத்திய தொலை தொடர்பு, ரயில், துறைமுகம் ,முக்கிய அலுவலகங்களுக்கு உரிமை வழங்க இந்த கோரிக்கை பரிசீலிக்க வேண்டும். மாநில பொதுப்பணி துறைக்கும் மின் விநியோகம் செய்யும் உரிமை வழங்க வேண்டும். மின் வாரியதில் கடன், தொழில் திறமையின்மை, ஊழல் அதிகரித்து விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை