உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்ப்ப கால யோகா பயிற்சியால் சுகப்பிரசவங்கள் அதிகரிப்பு: அமைச்சர் சுப்பிரமணியன்

கர்ப்ப கால யோகா பயிற்சியால் சுகப்பிரசவங்கள் அதிகரிப்பு: அமைச்சர் சுப்பிரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கர்ப்பகால யோகா பயிற்சியால், சுகப்பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை திருவல்லிக்கேணியில், கஸ்துாரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென்பொருள் என்ற, 'பிக்மி 3.0' இணையதளத்தை, அமைச்சர்கள் உதயநிதி, சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில், மகப்பேறு செவிலியர்கள் வழிநடத்தும் பராமரிப்பு மற்றும் பயிற்சி பிரிவு திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில், யோகா பயிற்றுவித்து வருவதால், சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சுகப்பிரசவங்களை மேலும் அதிகரிக்க, பராமரிப்பு மற்றும் பயிற்சி பிரிவு துவக்கப்பட்டுஉள்ளது.பிரசவ காலத்தில் ஏற்படுகிற ரத்த போக்கிற்கு சிகிச்சை அளிக்க, 2.98 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை, பிரசவ கால சிகிச்சைக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகளை கண்காணிக்கும் வகையில், 'பிக்மி 3.0' என்ற இணைய தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் வாயிலாக, மகப்பேறு வசதிகள் மற்றும் தொடர் பராமரிப்பு சேவைகளை கண்காணிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Parthasarathy Badrinarayanan
ஜன 09, 2024 17:53

சுப்பர் கதை. யோகா என்ற வார்த்தையே எரிச்சல் தரும் தில்லுமுல்லுகளிடமிருந்து வரும் கதை


வெகுளி
ஜன 09, 2024 15:49

அடுத்ததாக பதஞ்சலிக்கு எந்த சீடர் இங்க வந்து யோகா சொல்லி கொடுத்தார்ன்னு ஒருமுனைவர் பட்டம் ஆராய்ச்சி கட்டுரை வருமா?...


வெகுளி
ஜன 09, 2024 15:44

இத பார்றா.... ஹிஹி... என்ன விஷயம் சார் ?...


Paraman
ஜன 09, 2024 12:56

யோகா அவாளுடையதாயிற்றே...சரி என்ன இப்போ யோகாவை கண்டு பிடித்தது கட்டுமரம் என்று கட்டுமரம் 101...இல்லை 111. விழா எடுத்தால் ... அல்லக்கைகள் எல்லாம் வந்து தூக்கி பீப்பி வாசித்துவிட்டால் அதனை டுமீளன்கள் அப்பிடியே நம்பிடுவானுக


ராஜா
ஜன 09, 2024 10:24

சனாதன மூட நம்பிக்கை அல்லவா யோகாவும், பரத நாட்டியமும்.


vbs manian
ஜன 09, 2024 09:07

சார் யோகாவெல்லாம் சனாதனம். எப்படி ஒத்து போகும்.


Agni Kunju
ஜன 09, 2024 05:58

யோகாவா? என்னப்ப யோகாவ இந்துதுவான்னு உருட்டிக்கிட்டு இருக்காங்க இப்படி உள்ளடி வேலைய செய்யுற? … இப்படி எல்லாம் உண்மையைப்பேசினா… பிடியார் மாதிரி பல்லப்புடிங்கிறுவானுங்க திரவிட மாடல் மடையர்கள். பாத்து சூதானமா இருந்துக்ங்க…


Duruvesan
ஜன 09, 2024 05:52

நமக்கு ஹிந்துன்னா புடிக்காது, யோகா என்பது கிருத்துவர்கள் உலகுக்கு அளித்தது என பிரச்சாரம் பண்ணா ஓட்டு பிச்சிக்கும் இல்ல


Bye Pass
ஜன 09, 2024 04:53

நிறைய இளைஞர்கள் குடிப்பழக்கம் மற்றும் மனஉளைச்சல் காரணமாக கலியாணம் செய்து கொள்ளவே அஞ்சுகிறார்கள் ..அவர்களுக்கும் யோகா கற்று தரலாமே


Raa
ஜன 09, 2024 12:27

ஏன் அதுக்கு டாஸ்மாக்கை மூடலாமே? ஊத்தியும் கொடுப்பார்களாம் சரியும் பண்ணுவார்களாம்....


Raa
ஜன 09, 2024 12:29

ஆம் நாங்கள் யோகாவைத்தான் சப்போர்ட்டு செய்கிறோம். AYUSH என்ற மத்திய அமைப்பை அல்ல என்றும் சொல்லிவிடுங்கள். இல்லையேல் பதவிக்கு பங்கம் வந்துவிடும்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ