உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை

நடிகர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., 2ம் ஆண்டு துவக்க விழா நாளை(பிப்.,26) நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் உடன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நாளை(பிப்.,26) நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உட்பட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு மாவட்ட செயலர்களை வரவழைத்து கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.நாளை துவக்க உள்ள நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக நியமிக்கப்பட்டு உள்ள பிரசாந்த் கிஷோர் சென்னை இன்று இரவு சென்னை வந்தார். அவர் கட்சியின் தலைவரான விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Chess Player
பிப் 26, 2025 12:19

விஜய்க்கு எங்கிருந்து பணம் வருகிறது? விஜய் அவருக்கு குறைந்தது 300 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். விஜய்க்கு நிதி உதவி செய்வது யார்?


நாஞ்சில் நாடோடி
பிப் 26, 2025 10:51

தமிழ்நாட்டின் சாபம் ...


அம்பி ஐயர்
பிப் 26, 2025 08:01

கட்சி ஆரம்பிச்சு ஒண்ணும் போணியாகல.... தேர்தலில் தோல்வி... இது மாதிரி அட்வைஸ் கொடுத்தாவது ஒரு முன்னூறு நானூறு கோடி தேத்திடலாம்.....


karupanasamy
பிப் 26, 2025 04:58

சீமான் காளியம்மாளை ஸ்லீப்பர் செல்லாக அங்கு அனுப்பி தேர்தல் நேரத்தில் தவேக்காவிலிருந்து அதிகமான உறுப்பினர்களுடன் திரும்பி வந்தால் துணைத்தலைவர் பதவி என்று உறுதி கொடுத்திருப்பதாக சீமான்கட்சியினர் கூறுகின்றனர்.


Bye Pass
பிப் 25, 2025 23:18

விநாச காலே விபரீத புத்தி …ஓராண்டு காலத்துக்கு மேல்சொந்த மாநிலத்தில் நடைப்பயணம் சென்று தேர்தலில் டிபாசிட் வாங்காத பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு ஆலோசகர் ..கர்த்தருக்கு வந்த சோதனை ..


புதிய வீடியோ