உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கவர்னர் ரவிக்கு அழைப்பு; முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உ.பி., அமைச்சர்கள் முடிவு

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கவர்னர் ரவிக்கு அழைப்பு; முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உ.பி., அமைச்சர்கள் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தமிழகத்திலிருந்து அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்' என, உத்தர பிரதேச அமைச்சர்கள் ரத்தோர், அசீம் அருண் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னையில் அவர்கள் அளித்த பேட்டி:

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், ஆண்டுதோறும், கும்பமேளா நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகா கும்பமேளாவாக நடத்தப்படுகிறது.அதன்படி, 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை, 45 நாட்கள் மகா கும்பமேளா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, உத்தர பிரதேச அரசும், மத்திய அரசும் செய்துள்ளன. கடந்த, 2019ல் நடந்த கும்பமேளாவில், 25 கோடி பேர் பங்கேற்றனர். இந்த மகா கும்பமேளாவில், 45 கோடி பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.மற்ற நாடுகள், மாநிலங்களில் இருந்து மகா கும்பமேளாவுக்கு வருபவர்களுக்கு வசதியாக, அதிக விமானங்கள் வந்து செல்லும் வகையில், பிரயாக்ராஜ் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும், 13 ஆயிரம் முறை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன; 7,000 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், மாற்று பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவில் பங்கேற்க, தமிழக கவர்ன ரவிக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளோம்.முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். தமிழகத்திலிருந்து அதிகமானோர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

3,134 சிறப்பு ரயில்கள் இயக்கம்

மகா கும்பமேளாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்காக, 3,134 சிறப்பு ரயில்கள் இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. பிரயாக்ராஜில் நேற்று, பிரதமர் மோடி, 1,609 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, துவக்கி வைத்தார். ஜூசி -- பிரயாக்ராஜ் ரயில் வழித்தடத்தில், 850 கோடி ரூபாயில், 1.9 கி.மீ., மின்மயமாக்கபட்ட இரு வழிப்பாதை திட்டம்; ஏழு முக்கிய சாலைகளில், 375 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஏழு மேம்பாலங்கள்; 88 கோடி ரூபாயில் பிரயாக்ராஜ் ரயில் நிலைய சந்திப்பில் தடையின்றி ரயில் இயக்க வசதிகள்; 40 கோடி ரூபாயில் மூன்று சுரங்க பாலங்கள்; 226 கோடி ரூபாயில் ஏழு இடங்களில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய ரயில்வே சார்பில், 933.62 கோடி ரூபாயில், பல்வேறு மேம்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, இது தவிர, ரயில் பயணியரின் அடிப்படை வசதிக்காக, 494.90 கோடி; கட்டடங்கள், சாலை, பாலங்கள் பணிக்காக, 438.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.ரயில் நிலையங்களில், கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள், உதவி மையங்கள், 'டிஜிட்டல்' சேவைகள் என, பயணியர் சிரமமின்றி சென்று வர ஏற்பாடுகள் தயாராகி உள்ளன. பிரயாக்ராஜ் உள்ளிட்ட நான்கு ரயில் நிலையங்களில், கூடுதல் நடைமேடைகள், பயணியர் மேற்கூரைகள், பயணியர் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kumar Kumzi
டிச 14, 2024 14:24

இந்த இந்துமத ஜென்ம விரோதியை கும்பமேளாவுக்கு அழைத்து அந்த நிகழ்ச்சியை அசிங்கப்படுத்தாதீங்க


RAMAKRISHNAN NATESAN
டிச 14, 2024 14:15

அதானியும் வந்தால் எனது மாப்பிள்ளையுடன் வருகிறேன் .....


Indhuindian
டிச 14, 2024 14:15

Those who criticise and the septics should go and see the kind of arrangments made for the Kumbh. We were thee during the Kumbh 2019.Crowd management, providing facilities and cleanliness and friendly conduct of those who are engaged in providing services are to be seen to be believed. Even if you want to see a mg of garbage, you cannot see anywhere in the kumbh area approx 10 Sq Kms. All the State Governments even if they are atheists should should send a contigent of officials just to learn the crowd mangement and hospitality


Thiagarajan
டிச 14, 2024 13:03

நீயும் நாற்றம் பிடித்தவன் போல் பேசுகிறீரே ?


Anantharaman Srinivasan
டிச 14, 2024 12:44

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா அழைப்புக்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உ.பி., அமைச்சர்கள் முடிவு. ரொம்ப ரொம்ப அவசியம். பூர்ண கும்பம் வைத்து இந்த நாத்திகவாதியை அழையுங்ஙள். துர்கா ஸ்டாலினை அனுப்பி குடும்ப பாவத்தை குறைத்துக்கொள்வார்.


venugopal s
டிச 14, 2024 11:01

நாற்றம் பிடித்த மாநிலம், நாற்றம் பிடித்த மக்கள், அந்த நாற்றம் பிடித்தவர்கள் போய் வரலாம்!


Anantharaman Srinivasan
டிச 14, 2024 12:37

துர்கா ஸ்டாலின் போவாங்க..


sridhar
டிச 14, 2024 12:44

சந்தன கட்டை பேசுகிறது .


Kumar Kumzi
டிச 14, 2024 14:20

நாற்றத்தை பற்றி ஒரு டாஸ்மாக் கூமூட்ட பேசுறான்யா ??? ஹாஹாஹா


ghee
டிச 14, 2024 14:30

வேணு வாயில் சாக்கடை அடைபோ


hari
டிச 14, 2024 14:31

இவன் ஒரு பிறவி...வீணா போன....


Murugesan
டிச 14, 2024 09:37

மனித குலத்திற்கே தகுதியற்ற ஆளை விழாவிற்காக அழைப்பது இந்து மதத்தை நாமே அவமதித்து ஆகி விடும் ,


AMLA ASOKAN
டிச 14, 2024 09:32

இந்த கும்ப மேளாவிற்கு 5000 கோடி ருபாய் செலவழிக்கப்பட உள்ளது . இது இந்து நாடு தான் என்று பறை சாற்ற இந்த மேளா பிஜேபிக்கு கைகொடுக்கும் . புயல் , மழை பாதிப்புக்கு உண்டான மற்றைய மாநில மக்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை .


vbs manian
டிச 14, 2024 09:15

தெரிந்தே அழைப்பு.


sankaranarayanan
டிச 14, 2024 09:03

முதல்வரும் வீரமணியும்கூட கேரளம் சென்று வந்ததுபோல இங்கேயும் சென்றுவருவார்களாம்.


புதிய வீடியோ