வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி விறுவிறு
சென்னை:நாட்டின் முதல் அதிவேக 'வந்தே பாரத் - பார்சல் ரயில்' தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை பெரம்பூர், ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும்.மணிக்கு, 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையது. உணவுப் பொருட்களை பதப்படுத்தும் வசதி, பொருட்களை பாதுகாப்பாக கையாளும் வசதி இடம்பெறும்.இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது: பெருநகரங்களுக்கு இடையே அதிவிரைவு ரயில் சேவையை போல, சரக்கு ரயில் சேவையின் தேவையும் அதிகரித்து உள்ளது. முதல் முறையாக ஒரு முழுமையான பார்சல் ரயில் இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி தயாரிக்கப்படும் முதல் பார்சல் ரயில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில், 264 டன் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். முதற்கட்டமாக மும்பை, டில்லி மண்டலங்களில், இந்த ரயிலை இயக்க வாய்ப்புகள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் தங்களது பொருட்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.