உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம்; முதல் முதலாக இன்று ஏற்றப்படுகிறது!

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம்; முதல் முதலாக இன்று ஏற்றப்படுகிறது!

-நமது நிருபர்-நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்தால் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற தவெக அரசு தயாராகியுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் அல்ல; நில அளவைக்கல் என்று திமுக அரசு கூறியது போல, தவெக அரசும் கூறியது; அதை காரணம் காட்டி, தீபம் ஏற்றாமல் இருக்கவே முயற்சித்தது. அது மட்டுமின்றி, திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்றும் உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. இது, பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், தீபம் ஏற்றாமல் விட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் ஒரு பக்கம், உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையில் நீதிபதி கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள் மறு பக்கம் என அரசை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளன. இதன் காரணமாக, தீபத்துாணில் தீபம் ஏற்றும் முடிவுக்கு அரசு வந்துள்ளதாக, அலுவலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை இன்று காலை அலுவலர்கள் செய்து விட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை