உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வங்கிச்சேவை; சிறப்பு முயற்சி மேற்கொள்ள ஜனாதிபதி வலியுறுத்தல்

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வங்கிச்சேவை; சிறப்பு முயற்சி மேற்கொள்ள ஜனாதிபதி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களை, வங்கிச் சேவை வட்டத்துக்குள் கொண்டு வர சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்று, சென்னையில் நடந்த சிட்டி யூனியன் வங்கி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வந்தார். சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு நிறுவன விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:நமது வங்கித்துறையினர், விவசாயிகளுக்கும், ஊரக பொருளாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். உரிய காலத்தில் கடன் வழங்கி, வேளாண்மையை லாபகரமானதாக்க வங்கிகள் உதவி செய்ய வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சியின் இன்ஜின்களாக மாற்றுவதில் வங்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. விளிம்பு நிலை மக்களை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்.குடிபெயர்ந்து வருபவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் ஆகியோரை வங்கி சேவைக்குள் கொண்டு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் வங்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் வரை வங்கிகள் பல்வேறு வழிகளில் அரசுக்கும், மக்களுக்கும் உதவலாம். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தமிழிசை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்

இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 'நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயர்ந்து உள்ளது. தனியார் வங்கிகளின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும்,' என்றார்.முன்னதாக சென்னை வந்த ஜனாதிபதியை, விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ரவி, துணை முதல்வர் உதயநிதி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
செப் 02, 2025 19:25

பிச்சைக்காரர்கள் ஃபாரின் போய் நிறைய சம்பாரிச்சு பணக்காரங்களா திரும்பி வரணும்னு நினைக்கிறாங்க போலிருக்கு. நல்ல எண்ணம்.


தாமரை மலர்கிறது
செப் 02, 2025 19:19

தமிழகத்தில் வாழும் வெளிமாநில தொழிலாளிகளுக்கு வங்கி சேவை மட்டுமின்றி, அவர்களுக்கு வீடு கட்டி தரவேண்டும். அவர்களின் குழந்தைகள் பயில ஹிந்தி மட்டுமே உள்ள பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் வேண்டும். மேலும் தமிழக அரசு வேலையில் மட்டும் தனியார் உயர்பதவிகளில் பதினைந்து சதவீத கோட்டா கொடுக்க வேண்டும்.


T.sthivinayagam
செப் 02, 2025 17:05

நடப்பவை சமுதாய அக்கறையா அல்லது சமுக அக்கறையா மக்கள் கேள்வி கேட்கிறார்கள்


mindum vasantham
செப் 02, 2025 15:16

கடவுள் என்பது இல்லை அழகா இருப்பவனை நல்லவன் என்று இந்த உலகம் நம்புகிறது , அவனுக்கு தான் அறிவு இருக்கிறது என்று முட்டாள்தனமாக நம்புகிறது


புதிய வீடியோ