வாசகர்கள் கருத்துகள் ( 23 )
One india one election போல one india one price கொண்டு வரட்டும் சாமி. ஒரு சாப்பாடு சாப்பிட்டவுடன் வயிறும் நிறைய மாட்டேங்குது, அதுல என்ன போட்டு எப்படி பண்றாங்கன்னு தெரியாம சுவைக்கு மட்டும் சாப்பிட்டு நோய்களையும் காசு கொடுத்து வாங்கற மாதிரிதான் இருக்குது இப்ப..ஒரு பரோட்டா / சப்பாத்தி தெருவுல இருக்கிற ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை, ஒரே sizeஆகவும் இல்ல
இலவச வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிவறை இதற்கு தான் பலர் இந்த உணவகத்திற்கு செல்கிறார்கள்... காய்கறி, பழம் மற்றும் தானியங்களை அதிக அளவில் கொள்முதல் செய்வதால் வியாபாரிகள் இவர்களுக்கு சகாய விலையில் கொடுக்கிறார்கள். நம்மைப்போல் உள்ள அன்றாடங் காய்ச்சிகளிடம் கொள்ளை விலை வாங்குகிறார்கள்...
ஆளும் கட்சி ஆட்கள் வசூலிக்கும் அடாவடி தேர்தல் மாமூல் வசூல்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம்.
அதிக விலை விற்கும் ஹோட்டல்களில் ஏழைகள் சாப்பிடுவதில்லை.அங்கே சாப்பிடுபவர்கள் அதை தவிர்த்தால் காசும் மிஞ்சும்,ஒருவேளை பட்டினி போட்டால் ஜீரணமண்டலம் நலம் பெற்றால் நோயிலிருந்து தப்பி ஆஸ்பிடல் கொள்ளையிலிருந்தும் தப்பலாம்.
ஜி எஸ் டி ரொம்ப குறைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு தலையிட்டு விலைவாசியை கட்டு படுத்த வேண்டும்
எந்த பொருளின் விலைவாசியும் அதிகரிக்க வில்லை ...தேர்தல் வருவதால் அதிகரிக்கிறது ...லஞ்சம் தான் காரணம். GST குறைத்துள்ளது ஆனால் ஹோட்டல் விலை அதிகரிக்கிறது எப்படி?
GST குறைப்பு வருவதால் சாப்பாடு ஹோட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட் முதலாளிகள் GST பலனை மக்கள் அனுபவிக்காமல் இருக்க இப்போதே உணவு பொருள்களின் விலையை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். கோவையில் உள்ள நாகர்கோயில் ஆர்யபவன், அன்னபூர்ணா உணவு பொருட்களை கொள்ளை லாபம் வைத்து லாபம் பார்க்கிறார்கள். சாதாரணமா ரெண்டு பேர் சாப்பிட சென்றால் சுமார் ருபாய் 1500 க்கு குறைவில்லாமல் பில் போடுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு இதுபோன்று கொள்ளை அடிக்கும் ஹோட்டல்களை பொதுமக்கள் தவிர்த்து கொள்ள செய்யவேண்டும், குறிப்பாக கோவை அன்னபூர்ணா, நாகர்கோயில் ஆர்யபவன், அடையார் அனந்தபவன், அஞ்சப்பர், போன்ற செயின் ஹோட்டல் யும் கொள்ளை விலை விற்கும் ஹோட்டல்களை தவிருங்கள்.
ஜி எஸ் டீ வரியா குறைச்சலே போதும்
ஆக, பொருட்களின் விலை உயர்வு - தாழ்வுக்கும் விலை ஏற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது. தேர்தல் வருகிறது தேர்தல் நிதி கொடுக்க வேண்டும் ஆளுங்கட்சி அதிகார அடாவடி செய்யும். வேறு வழி இல்லை. அடுத்தடுத்து பாருங்கள், ஆம்னி பஸ்ஸிலிருந்து எல்லாமே விலை உயர்வடையும்.
ரியல் எஸ்டேட் மாதிரி ஓட்டல் உணவு வகைகள் விலை ஏறிக்கொண்டே போகிறது, நம்மால் ஒன்னும் செய்ய இயலாது அதற்க்கு நிறைய காரணம் சொல்வார்கள். சுருக்கமா சொன்னால் பேராசைக்காரர்கள்.. மக்களுக்கு விலை அதிகம் என்றால் தரமானது என்ற நினைப்பு.. அதில் தரமும் இல்லை சுத்தமும் இல்லை, ஆகவே வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.