உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்

சென்னை:தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோஜாக்' அறிக்கை: அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கடந்த அக்., 13ல் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதில், 12 கோரிக்கைகளை ஏற்று, நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது; இன்னும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி, வரும் 11ம் தேதி, மாநிலம் முழுதும் வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி