உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார்: நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார்: நிர்மலா சீதாராமன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒசூர்: ‛‛ தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் '', என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஒசூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், திமுக.,வைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி பற்றியோ, ஒசூரை பற்றியோ பார்லிமென்டில் பேசினார்களா என்பது பெரிய கேள்விக்குறி. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், மத்திய பா.ஜ., அரசு பலவித திட்டங்கள் மூலமாக மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்கள் செய்துள்ளது.முத்ரா திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.5,427 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 80 கோடி ஏழைகளுக்கு அடுத்த 5 வருடம் வரை கோதுமை, அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கோவிட் காலம் முதல் இதனை கொடுக்க ஆரம்பித்தோம். முதியோருக்கு பென்சன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4,096 பேர் பயன்பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 2.75 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 18,600 பேருக்கும், நகர்ப்புறத்தில் 7,460 பேருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2.35 லட்சம் குடும்பங்கள் பலன்பெற்றுள்ளன.கடந்த 10 ஆண்டுகளில் ஒசூரில் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஒசூரில் ராணுவ தளவாடங்கள் காரணமாக பல நன்மைகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.போதைப் பொருட்களை கூட இறக்குமதி செய்து, நமது இளைஞர் வாழ்க்கையை பாழாக்கும் குடும்பத்தை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது. அந்த குடும்பத்தோடு தான் ஜாபர் சாதிக் நேரடி தொடர்பு வைத்து இருந்தார் என பல ஆதாரங்கள் உள்ளன. போதைமூலமாக வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கக்கூடிய எந்த குடும்பமும் வாழ்ந்தது இல்லை. போதைப்பொருளை வைத்துக் கொண்டு ஆதாயத்திற்காக அரசியல் செய்யும் குடும்பத்தை நிராகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு போதை வேண்டாம். திமுக.,வை நிராகரிக்க வேண்டும். உதயம் தமிழகத்திற்கு இல்லை. அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் தான். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.n. Dhasarathan
ஏப் 12, 2024 21:16

மோடி கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றுதான் கோவிட மருந்துகளை காசுக்கு விற்றது, பலமான எதிர்ப்புக்கு பிறகு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக கொடுக்கப்பட்டது, அதிலும் புண்ணியவான் % மருந்துகளை தனியார் வசம் கொடுக்க நிர்பந்த படுத்தினார், அதில் அவர்கள் கொள்ளை லாபம் பார்த்தனர், % வேஸ்ட் பண்ணினார் தனியார்கள் இதுபோல ஒவ்வொரு திட்டத்திற்கும் உள்ளே போயி பார்த்தால் எல்லாவற்றிலும் குளறுபடிகள் எண்ணிலடங்காது


Ramesh Sargam
ஏப் 12, 2024 20:15

அத்தனை திட்டங்களுக்கும் மாநில முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெட்கமில்லாமல், மானம், மரியாதை இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி தமிழ் நாடு திட்டம் போல மக்களை ஏமாற்றுகிறார்


vbs manian
ஏப் 12, 2024 20:14

பிழைக்க தெரியவில்லை இந்தியா முழுதும் கோடி கணக்கான மக்கள் பயன் அதை சொல்லி வோட்டு கேட்க வேண்டும் கஞ்சா கொடுமையை இன்னும் உரக்க பேச வேண்டும்


spr
ஏப் 12, 2024 18:03

ஏறக்குறைய செயல்கள் பாஜக அரசு செய்ததாக இணையத்தில் ஒரு செய்தி படித்தேன் பெரும்பாலானவை உண்மையெனவே நான் அறிகிறேன் ஆனால் இவை தமிழக பாஜக தலைவர்களுக்காவது தெரியுமா என்று தெரியவில்லை ஏனெனில் ஒருவரும் குறிப்பிடவில்லை


c.chandrashekar
ஏப் 12, 2024 16:50

மத்திய அரசாங்கம் கொடுக்கும் எல்லா பணத்திலும் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஓட்டினால் உங்களுக்கு எப்படி தெரியும்


T.sthivinayagam
ஏப் 12, 2024 16:44

தில்லை நடராஜர் மீது உண்மையாக கேட்கிறேம் அந்த திட்டங்கள் என்ன


Hari Bojan
ஏப் 12, 2024 15:35

தினமும் குடிப்பவனின் செலவு ரூபாய் முன்னூறு முதல் அறுநூறுவரை இன்று குடித்துவிட்டு நாளை பையில் பணமில்லையே என ஏங்குவோர் பலர் பல லோன்கள் மற்றும் வட்டிக்கு பணம் பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டியுள்ளது மாற்றம் தேவை என்பது குடிப்பவர்களுக்கே இன்று வெட்டவெளிச்சமாக தெரிகின்றது சிலர் அவர்கள் வீட்டு எஜமானியிடம் ரூபாய் ஆயிரத்திலிருந்து முன்னூறு ஐநூறு என வாங்கிக்கொண்டு அதனையும் ஊதாரித்தனமாக குடித்துவிட்டுவந்து அவர்களிடமே குடுமிப்பிடி சண்டைபோடுவது தமிழகத்திற்கு கைவந்த கலையாயிற்றே


Indian
ஏப் 12, 2024 14:01

ஒரு ரூபா இதுவரை உதவி செய்ததில்லை என்ன ஒரு பொய்


முருகன்
ஏப் 12, 2024 13:37

திட்டத்தின் பெயரை மட்டும் சொல்லவே மாட்டோம்


Velan Iyengaar
ஏப் 12, 2024 12:54

தேர்தல் பத்திர ஊழல் பற்றி கூட பேசுங்க மூன்று வருடங்களாக நஷ்ட கணக்கு காட்டிய நிறுவனம் உங்க கட்சிக்கு நூற்றுக்கணக்கான கோடி ருபாய் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியது எதற்கு ??


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி