உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரம்ப் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம்; பா.ஜ., கருத்து

டிரம்ப் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம்; பா.ஜ., கருத்து

சென்னை: 'டிரம்ப் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம்' என தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே., நாகராஜ் தெரிவித்தார்.இது குறித்து அவரது அறிக்கை: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெற்ற வரலாற்று வெற்றிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அளித்த ஆதரவும்,களப்பணியும் ஒரு காரணம். இருப்பினும் அவர் பிரதமர் மோடியின் நண்பராக இருந்து தேசியம் என்ற கொள்கையை ஏற்று,செயல்பட்டதும் ஒரு முக்கியக் காரணம். வல்லரசுகளின் அதிபரை நிர்ணயிக்கின்ற சக்தியை இந்தியா பெற்றிருப்பது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை.அதற்கு காரணமானவர் மோடியும், அவருடைய அயலாத உலக சுற்றுப்பயணமும். ஆனால் தமிழகத்தில் மட்டும் பிரதமர் மோடி மீது வெறுப்பை திணிக்கும் அரசியல் செய்து உண்மைக்கு மாறாக தமிழக மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது திராவிட மாடல் திமுக அரசு. தமிழக மக்கள் உண்மையை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு ஜி.கே. நாகராஜ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
நவ 10, 2024 00:26

மோடி முக்கி முக்கி அப்கே பார் ட்ரம் சர்க்கார்னு சொன்ன போது வெற்றி பெற வில்லை. இப்போ இவுரு நடுவுல பூந்து காமெடி பண்ணிக்கிட்டு. அமெரிக்காவில் பெரும்பாலான இந்தியர்கள் கமலா ஹாரிஸ்குதான் வாக்களித்தார்கள். இருந்தாலும் பத்தலை.


S.Martin Manoj
நவ 09, 2024 13:31

இந்த காமடிக்கு வாயிலதானே சிரிக்கணும்


வாய்மையே வெல்லும்
நவ 09, 2024 16:26

என்னென்ன ஆட்டம் போட்டு உருட்டினீங்க கமலா ஆரஞ்சு ஜெயிக்கும் என்று எல்லாம் மண்ணோடு மண்ணாக போனது அய்யகோ அதை நினைச்ச சிப்பு சிப்பா வருது டோய்


Ramesh Sargam
நவ 09, 2024 13:14

அது எப்படியோ, அவரால் இந்தியாவுக்கு, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு நல்லது நடந்தால் ரொம்ப சந்தோஷம்.


சமீபத்திய செய்தி