உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி

நாகர்கோவில் : அகஸ்தீஸ்வரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். பொதுக்கூட்டத்தில் தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேசி பேச்சை துவக்கினார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று காலை குமரி விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் வந்தார். அங்கிருந்து காரில் மேடைக்கு வரும் பிரதமர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். மார்ச் 18-ல் கோவையிலும், 19ல் சேலத்திலும் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் பேசுகிறார். இதற்காக திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு படையினரும் முகாமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

venugopal s
மார் 15, 2024 23:25

எப்படியும் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறப் போவதில்லை. இவர் இத்தனை தடவை வந்து பிரசாரம் செய்து தோற்று பெயரைக் கெடுத்துக் கொள்ளப் போகிறார்!


g.s,rajan
மார் 15, 2024 12:38

இந்தியாவில் ,வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்த மாதிரியா ...???


g.s,rajan
மார் 15, 2024 12:33

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் ....


g.s,rajan
மார் 15, 2024 11:53

எதற்கு ...???


g.s,rajan
மார் 15, 2024 11:51

வெறும் பேச்சாக இருக்காது ,நிச்சயம் தேன் தடவிய பேச்சாக இருக்கும்....


suresh
மார் 15, 2024 12:22

மற்றவர்களை போல பேச்சில விஷம் தடவாமல் தேன் தடவி தானே பேசுகிறார் ? உமக்கு என்ன குறை ?


g.s,rajan
மார் 15, 2024 11:48

தமிழ்நாட்டுக்கு வெறுங்கையோடு வந்திருக்கிறார் .....


suresh
மார் 15, 2024 12:29

கவலை வேண்டாம். அநியாய தீயமுக, தீய முக மற்றும் காங்கிரஸ் அடித்த கொள்ளை பணத்தை அவர்களிடம் வசூல் செய்து, அதன் மூலம் தமிழக மக்களுக்கு நன்மை செய்து, தமிழகத்தை மோடி வாழவைப்பார்


Rajah
மார் 15, 2024 11:43

தங்களது தொகுதிகளில் ஒரு முறை கூட செல்லாத இவர்கள் மோடி வருகை பற்றி ஓலமிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மோடி அடிக்கடி தமிழகம் வருவதை பற்றி இன்று தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெறும். எத்தனை முறை இவர்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்றுள்ளார்கள் என்று கேளுங்கள்


Oviya Vijay
மார் 15, 2024 11:25

இதற்கு முட்டு கொடுக்க நினைக்கும் சங்கிகள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து கதறவும்... பார்க்கவே சந்தோஷமாக உள்ளது...


Sampath Kumar
மார் 15, 2024 11:15

அப்படியே திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தா பாறையில் நின்று செல்பி ஏடுத்து விட்டு வாயில் வடை சுட்டு விட்டு போகச் சொல்லுங்க புனியமாக போகும்


suresh
மார் 15, 2024 12:12

தீய முக மற்றும் அவர்களின் எரநூறு ரூபாய் அடிமைகளுக்கு மோடி வாயினால் விடை தான் கொடுப்பர் . வடை கொடுப்பது தீய திராவிடம் மட்டுமே


வேலாயுதம்
மார் 15, 2024 09:46

வெறும் பேச்சுதானா? நான் ஏதோ ஒரு லட்சம் கோடி திட்டங்களுக்கு செங்கல் வெச்சு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போறார்னு நெனச்சேன்.


suresh
மார் 15, 2024 10:45

மோடிஜி ஒவ்வொரு முறையும் லக்ஷக்கணக்கில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு அப்பாவி. அது சரி இப்படி நீங்கள் தமிழக அரசிடம் எதிர் பாருங்களேன் பார்க்கலாம்


மேலும் செய்திகள்