உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து

பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து

சென்னை: பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம், 26ம் தேதி இரவு, துாத்துக்குடி வந்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தை துவக்கி வைத்தார். அன்றிரவு திருச்சி சென்ற மோடி, அங்கு தங்கியிருந்து, மறுநாள் அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த, ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஏழு மாதங்களே உள்ளன. எனவே, தமிழகத்தில் பா.ஜ.,வினரை உற்சாகப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி இம்மாதம், 26ம் தேதி கடலுார், திருவண்ணாமலை சென்று, அம்மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல திட்ட மிட்டிருந்தார். கூடவே, கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டது. ஆனால், பிரதமர் வருகைக்காக திட்டமிடப்பட்ட நாளில் வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை