உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராட்டம் நடத்த முன் அனுமதி அவசியம்: முதல்வர்

போராட்டம் நடத்த முன் அனுமதி அவசியம்: முதல்வர்

சென்னை: 'போராட்டம் நடத்த முன் அனுமதி அவசியம். நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது. அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது, பா.ம.க.,எம்.எல்.ஏ., ஜி.கே மணி பேசியதாவது: போராட்டத்திற்கு அனுமதி தரப்படுவதில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் பெரிய அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால் இது போதாது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் விளக்கம்

அப்போது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது: போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னால், முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். அதுவும் அனுமதி கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் மட்டும் தான் அனுமதி கொடுக்க முடியும். நேற்றைக்கு கூட, ஆளுங்கட்சியாக இருக்க கூடிய தி.மு.க., சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து இருக்கிறது.திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும். ஆளுங்கட்சியாக இருந்தாலும், தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது என்பதை பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே மணிக்கு எடுத்து சொல்லுங்கள். பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக விவாத நேரத்தில் எதிர்க்கட்சியினர் பேசியதாவது:

* வேந்தர் என்ற முறையில் அண்ணா பல்கலை விவகாரத்திற்கு கவர்னர் பொறுப்பேற்க வேண்டும்: வேல்முருகன், த.வா.க., எம்.எல்.ஏ.,* மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு துணை வேந்தரை நியமிக்காததே காரணம்: ஈஸ்வரன், கொ.ம.தே.க., எம்.எல்.ஏ.,* அண்ணா பல்கலை முடங்கியிருப்பதற்கு கவர்னரே காரணம்: சிந்தனைச்செல்வன், வி.சி.க., எம்.எல்.ஏ.,* பாலியல் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: காந்தி, பா.ஜ., எம்.எல்.ஏ.,அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: நேற்று போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் கைது செய்யப்படவில்லை. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரை திட்டமிட்டு தாக்கி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

வாபஸ்!

சட்டசபையில் கவர்னர் உரையின் போது அ.தி.மு.க.,வினர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியது குறித்து அவை உரிமை மீறல் குழு விசாரிக்கும் என்று சபாநாயகர் அறிவித்தார். அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதும், உத்தரவை சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஜன 09, 2025 08:18

அப்போ... திமுக ஆட்கள் சட்டத்தை மதிக்காதவர்கள்.... அப்படி தானே??


பேசும் தமிழன்
ஜன 09, 2025 08:15

இன்னும் சென்னை உயர்நீதிமன்றம் தூங்கி கொண்டு இருந்தால்... நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையே போய் விடும் !!!!


பேசும் தமிழன்
ஜன 09, 2025 08:10

அப்போ.. திமுக ஆட்கள் மட்டும் எப்படி மைக் போட்டு பேசினார்கள் காலை? உங்கள் கட்சிக்கும் உங்களுக்கு ஜால்ரா போடும் ஆட்களுக்கும் மட்டும் எப்படி அனுமதி கிடைக்கிறது.. இந்த அனுமதி வாங்க வேண்டும் என்பதே ஒரு ஏமாற்று வேலை !!!


Mani . V
ஜன 09, 2025 04:15

காமெடி, காமெடி. இப்பவெல்லாம் நம்ம இரும்புக்கை கோப்பால் நிறைய காமெடி செய்கிறார்.


Duruvesan
ஜன 08, 2025 21:14

அப்போ உபிஸ் சட்டத்தை மதிக்க மாட்டானுங்க


sridhar
ஜன 08, 2025 18:47

திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு விருப்பமான உணவு உண்ணும்படி வற்புறுத்தப்பட்டனர் .


sankaranarayanan
ஜன 08, 2025 17:51

நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.இந்த வழக்கு பெயரளவுக்குத்தான் ஆனால் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை ஆடுகள் மாடுகள் தொழுவத்தில் அடைக்கப்படவும் இல்லை இதிலிருந்தே தெரிகிறதே பாரபட்சம் எப்படி என்று


என்றும் இந்தியன்
ஜன 08, 2025 17:09

நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதனால் தெரிவது என்னவென்றால் 1 ஸ்டாலினை திமுக கட்சியினரே மதிப்பதில்லை 2 ஸ்டாலின் முதல்வராக சபதம் எடுக்கும் போது இப்படிதான் சொல்லி சபதம் எடுத்திருப்பார் "நான் பொய்யை தவிர ஒருக்காலும் உண்மை பேசமாட்டேன்" 3 எனக்கு மக்கள் நலன் அவசியமேயில்லை திமுகவின் நலம் மட்டுமே முக்கியமானது


visu
ஜன 08, 2025 16:28

போராடிய எதிர்கட்சிகளை வீட்டு காவலில் வைத்தீர்கள் பா ம கா ஆரம்பிக்கு முன்னரே கைது செய்தீர்கள் இதுபோல எத்தனை தி முக போராட்டக்காரர்களை போராடவே விடாமல் தடுத்து கைது செய்தீர்கள்


Narayanan
ஜன 08, 2025 15:46

யார் அனுமதி தேவை ? போலீஸ் ஸ்டாலின் கையில் இருக்கிறது . அப்போ திமுகவிற்கு மட்டும் உடனடியாக அனுமதி கொடுங்கள் . அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்லிவிட்டாரா? அப்படியென்றால் ஸ்டாலின் அவர்களின் தவறுகளை திசை திருப்ப இந்தமாதிரி கேவலமான வேலை செய்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை