உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் பஸ் ஓட்டுனர்களின் உயிர் விளையாட்டு!; உயிரை கையில் பிடித்தபடி மக்கள் திகில் பயணம்

தனியார் பஸ் ஓட்டுனர்களின் உயிர் விளையாட்டு!; உயிரை கையில் பிடித்தபடி மக்கள் திகில் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை,: 'டைமிங்' பிரச்னையால், உயிர்களை துச்சமாக மதித்து ஒரு பஸ் மீது இன்னொரு பஸ்சை மோத வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகிறது.அரசு, தனியார் டவுன்பஸ்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக தனியார் பஸ்களின் நடவடிக்கையால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. பஸ்கள் இடையே இருக்கும் போட்டியால், முக்கிய ரோடுகளில், பிற வாகன ஓட்டிகள் குறித்து கவலைப்படாமல், அசுர வேகத்தில் பஸ்களை இயக்குவது, அதிக ஒலி எழுப்பியவாறு செல்வது, வழிவிடாத வாகனங்களை இடிப்பது போல் செல்வது, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஓட்டுனர்கள் ஈடுபடுகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன், கோவை வடவள்ளி - ஒண்டிப்புதூர் வரை சென்ற இரு தனியார் பஸ் ஓட்டுனர்கள், போட்டி போட்டுக் கொண்டு, அசுர வேகத்தில் பஸ்களை இயக்கினர். இதைக்கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒதுங்கினர்.ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு வரை சென்றது. இறுதியில், பஸ்களை இயக்காமல் பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டனர். டிக்கெட் எடுத்த பயணிகள், திட்டித்தீர்த்தபடி வேறு பஸ்ஸில் சென்றனர். குறிப்பாக, பெண் பயணிகள், வயோதிகர்கள், பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

டைமிங் பிரச்னை

சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில், தனியார் பஸ் டிரைவர்கள், டைமிங் பிரச்னையால், அடிக்கடி தகராறு செய்து, பேருந்துகளை இயக்காமல் நடுரோட்டில் நிறுத்தி விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களோ தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர்.

இது முதல் முறை அல்ல

இதற்கு முன் இதே வழித்தடத்தில் இயங்கிய, இரு தனியார் பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்த முயற்சித்தன. அப்போது, ஒரு தனியார் பஸ் மற்றொரு தனியார் பஸ் மீது மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. பயணிகளின் உயிரை மதிக்காமல், டிரைவர்கள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பஸ்களின் பர்மிட்டை ரத்து செய்ய, அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரிய தொகை கைமாறி இருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்களுக்கு, அதிகாரிகளின் இந்த மவுனம் வித்திடுகிறது. இதுகுறித்து, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாலமுருகன் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட பஸ் உரிமையாளர்களிடம், இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் பெற்று, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன் அடிப்படையில், பஸ் பெர்மிட் ரத்து செய்வது குறித்து, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Bob
அக் 30, 2024 19:47

யமன் தன் வாகனங்களை தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் என்று பெயர் வைத்து ஓட விட்டு இருக்கிறான். எந்த ஊரிலும் இவர்களின் அராஜகம் தான். ரோடுகள் எல்லாம் இவர்களுக்கு மட்டும் சொந்தம். என்னமோ தெரியலே : தனியார் பஸ் டிரைவரா ஓட ரௌடிகள் பிறவி எடுத்து வந்தது போலவே இருக்கிறது. அதிகார வர்க்கம் கண்டு கொள்வது இல்லை. உயிரை கையில் பிடித்து கொண்டு ரோடில் போக வேண்டியுள்ளது. கொடுமை.


Alwys Robinson
அக் 30, 2024 13:34

மதுரை தென்காசி சாலையில் தனியார் பேருந்துகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அடிக்கடி விபத்துக்கள் நடந்தும், அவர்கள் அதை சரி செய்யவில்லை.


M.P. Subramanian
அக் 30, 2024 08:01

இந்த உயிர் விளையாட்டு திருச்சி மாநகரில் சர்வ சாதாரணம். பயணிகளின் எந்தவித கேள்விகளையும் தனியார் பேருந்து ஓட்டுநர்/ நடத்துனர்கள் மதிக்கமாட்டார்கள். பயணிகள் ஒருமையில் வா, போ, இறங்கு, ஏறு என்று மரியாதையின்றி பேசுவதுதான் வழக்கம்.தினம் பஸ்ரேஸ் நடக்கும் வழித்தடங்களில் முக்கியமானது 9 ம் நம்பர் உறையூர் வழியாகும். யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். தனியார் பஸ் ஓனர்கள்/ பினாமிகள் யார் என்பது திருச்சி மக்களுக்கும் தெரியும்.


kr indran
அக் 29, 2024 23:28

தமிழ்நாடே அப்படித்தான்


ரெங்கநாத்
அக் 29, 2024 17:18

திருச்சி ஸ்ரீரங்கம் டவுன் பஸ்களும் இப்பிடித்தான். நடுவுல் லொட லொடா அரசு பஸ்களும் சேர்ந்து பூலோக வைகுண்டம் சீரங்கம் போவோமே இல்லே நேரா வைகுண்டம் போயிடுவோமான்னு பயம் வருது.


அப்பாவி
அக் 29, 2024 17:16

ஒரு கோடிக்கு ஆயுள் இன்சூரன்ஸ், 2 கோடிக்கு மருத்துவ இன்சூரன்ஸ் இல்லாம தனியார் பஸ் ஏறாதீங்க.


KayD
அக் 29, 2024 14:48

இது இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல. Cuddalore pondy ரூட் la enaku தெரிஞ்சி 1970 ல இருந்தே இதே aatam தான். எல்லாம் pondy la போய் saraku அடிக்க தான்.. So அந்த route ku sema demand. So போட்டி அதிகம் Pondy return podhai பயணிகள் நிலமை இன்னும் அதிகம் அசிங்கம். மதுரை திண்டுக்கல் அதே கதை தான்.. பாவம் பயணிகள்..


V RAMASWAMY
அக் 29, 2024 14:36

தமிழகத்தில் பஸ்ஸில் பிரயாணம் செய்வதென்பது ஒரு மிகவும் வேதனையும் வருத்தைத்தையும் தரும் விஷயம். டிரைவர், கண்டக்டர் சுய நினைவில் அநேகமாக இருப்பதில்லை, அவர்கள் பிரயாணிகளிடம் பேசும் விதம் மரியாதைக் குறைவாகவும் தரமின்றியும் பிரயாணிகளை ஏதோ ஆடு மாடுகளை விரட்டுவது போலிருக்கும். பவர் ஹார்ன் சத்தம் காதைத்துளைக்கும், தவிர சினிமா, பாட்டு இவற்றின் சப்த அளவு வரையறைக்கு மேல். என்ன செய்வது? யதா ராஜா ததா பிரஜா .


Raa
அக் 29, 2024 13:21

இதில் அரசு மன்றங்களில் தீர்ப்பு வராது. அனைத்து பஸ் முதலாளிகளும் அதிகார வர்கங்களில் இருப்பவர்களே. பொதுமக்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டும். பஸ்சுக்குள் இருப்பவர்களும், ரோட்டில் செல்பவர்களும் உடனே செய்யவேண்டியது என்னவென்றால் .... உங்களுக்கு தெரிந்ததை நான் ஏன் சொல்ல வேண்டும்


Prabakaran
அக் 29, 2024 13:19

இப்படி போட்டி போட்டுகொண்டு முந்திக்கொண்டு முதலில் வரும் பஸ்களுக்கு RTO சார்பில் பரிசு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை