உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் விழாவுக்கு பஸ்களை அனுப்புமாறு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

முதல்வர் விழாவுக்கு பஸ்களை அனுப்புமாறு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவுக்கு, பயனாளிகளை அழைத்துச் செல்ல, தனியார் பள்ளிகளிலிருந்து பஸ்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை, நேதாஜி மைதானத்தில் அரசு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், பயனாளிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.உடுமலை விழாவுக்காக, மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்தும் வாகனங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இதுதொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி நிர்வாகிகள் தரப்பிலிருந்து, பள்ளி வாரியாக பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் விபரம் பெறப்பட்டது. அந்த விபரங்களின் அடிப்படையில் உரிய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பொறுப்பில், உடுமலை விழாவுக்கு பயனாளிகள் மற்றும் கட்சியினரை அழைத்துச் செல்ல வாகனங்களை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பெயர் வெளியிட விரும்பாத பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும், அந்த பள்ளிகள் அனுப்ப வேண்டிய வாகனங்களின் பதிவெண் குறிப்பிட்டு அவற்றை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.இதற்காக, 23ம் தேதி காலையிலேயே வாகனங்களை டீசல் நிரப்பி, டிரைவர் மற்றும் உதவியாளருடன் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்துக்கு கட்சி நிர்வாகிகள் பொறுப்பில் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.மீண்டும் விழா முடிந்து அவர்களை அதே இடத்தில் திரும்ப கொண்டு வந்து விட வேண்டும். பள்ளி வேலை நாளில், ஐந்து பஸ், பத்து பஸ் என்று அனுப்பி விட்டால், அந்த நாளில் மாணவர்களை எப்படி அழைத்துச் செல்வது? இதனால் பல தரப்பினரும் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கல்வித்துறை தரப்பில் கேட்டதற்கு, 'உடுமலையில் விழா நடக்கும் நாளில் பள்ளி மாணவர்களை அழைத்து வர உரிய மாற்று ஏற்பாடு செய்து கொள்ளவும், பள்ளிக்கு விடுமுறை விடாமலும் இதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.'அதிகளவிலான வாகனங்கள் உள்ள பள்ளிகளில் மட்டும் இரண்டொரு பஸ்கள் அனுப்புமாறு அறிவுறுத்தி உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

xyzabc
ஜூலை 19, 2025 15:02

துணிவுடன் கேள்வி கேட்க யாருமே இல்ல. Misuse of power. Scary situation but money wins and people lose.


பாரத புதல்வன்
ஜூலை 19, 2025 12:19

அரசின் கடையில் குடித்து, பள்ளி பேருந்தில் கட்சி கூட்டத்திற்கு போகும் 200 கொத்தடிமைகள் பஸ்சுக்குள் மட்டையாகி வாந்தி எடுத்தால் மாணவர்கள் நிலை என்னாவது... அவர்களும் போதையின் பாதைக்கு செல்ல வாய்ப்பிருக்கு.


ஆரூர் ரங்
ஜூலை 19, 2025 11:08

தானா சேர்ந்த கூட்டம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நேற்று கூட உ.பி ஸ் ஒரு பள்ளியின் பேருந்துகளை எரிந்து நாசம் செய்து விட்டனர். இதே ஆட்சியில்தான் 2022 இல் கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தாக்கி அழிக்கப்பட்டது. கல்வி வளர்ச்சிக்கு திமுக பாடுபடும் லட்சணம்.


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூலை 19, 2025 11:02

ஊடகங்களுக்கு வாய் பூட்டு போட்டபின் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தற்போது எல்லாம் ஊடகங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு தூணாக நிற்பதில்லை. ஒரு தொழிலாக நடத்துகிறார்கள் அதில் திமுக முதலாளி என்ன சொல்வது.


ramesh
ஜூலை 19, 2025 10:48

இது நேற்று இன்று அல்ல 1977 ஆம் ஆண்டில் mgr முதல் முதலாக முதல்வராக பதவி ஏற்ற போதில் இருந்தே நடந்து வருகிறது . பெரியாரின் தமிழ் சீர்திருத்த எழுத்துக்கள் தொடங்கி வைக்கும் விழா mgr தலைமையில் நெல்லையில் நடந்தது .அப்போது தனியார் பஸ்கள் அனைத்தும் மாணவர்களை அழைத்துவர பயன் படுத்த பட்டது 1978 ஆம் ஆண்டு நான் பிளஸ் 1 படிக்குமபோது இது நடந்தது


நாஞ்சில் நாடோடி
ஜூலை 19, 2025 12:00

அன்று கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாணவர்கள் தனியார் பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். இதில் தவறு இருந்ததாக தெரியவில்லை. இன்று அரசு விழாவிற்கு 200 ருபாய் சம்பள ஆட்களை அழைத்து வர தனியார் பள்ளி வாகனங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கின்ற்றனர். தனியார் பள்ளி வாகனங்கள் அப்பா சொத்தா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 19, 2025 10:12

தவறேதுமில்லை . சாலைகளில் செல்லும் ஏராளமான பேருந்துகள் வட்டம் மாவட்டம் பெரிய வட்டம் அமைச்சர்களுக்கு சொந்தமானவையே. பல பள்ளிகள் அந்த பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


R.MURALIKRISHNAN
ஜூலை 19, 2025 09:50

அடுத்தவனிடத்திலிருந்து கெ கொள்ளை படித்தே சம்பாதிக்கும் கூட்டம். இவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். கையில் இருக்கும் ஓட்டு, வரும் தேர்தலில் கவனமாய் பார்த்து நீயும் குத்து. திருடர் கூட்டம் அழியட்டும், நல்ல தமிழகம் இங்கு மலரட்டும்


c.k.sundar rao
ஜூலை 19, 2025 09:17

Blatant misuse of official machinery and powers for an event organised by dmk govt ,putting people of the place to difficulty.


Thravisham
ஜூலை 19, 2025 09:13

திருட்டு த்ரவிஷன்கள் மோசம் மிக மோசம். 200/500/1000 பணத்தால் அடிக்கப்பட்டவர்களே உங்களுடைய தலைமுறையை நாசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.


sankaranarayanan
ஜூலை 19, 2025 08:43

அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும், அந்த பள்ளிகள் அனுப்ப வேண்டிய வாகனங்களின் பதிவெண் குறிப்பிட்டு அவற்றை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதை நீதி மன்றமே முன் வந்தது தடுத்து நிறுத்தவேண்டும் அரசே இப்படி செய்தால் மட்றவர்கள் என்ன செய்வார்கள் யாரிடம் சென்று அழுவது ஆண்டவா நீ எங்கிருக்கிறாய் அநியாயம் கட்டுக்கடங்காமல் போய்விட்டதே


சமீபத்திய செய்தி