உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்

இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோருக்கு, தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவு சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மருத்துவ மாணவர்கள் சங்க வெளிநாட்டு பிரிவு நிர்வாகி வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 1,400 மாணவர்கள், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து தமிழகம் திரும்புகின்றனர். அவர்கள் இந்தியாவில் தேர்வு எழுதி தகுதி பெற்றதும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் சார்பில், தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.இதன் பிறகே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் தடையில்லா சான்று பெற்று, மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும். மேலும், நிரந்தர டாக்டராகவும் பதிவு செய்ய முடியும்.கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, தற்காலிக தகுதி சான்று பெற பதிவு செய்து காத்திருக்கிறோம். ஆனால், பணம் கொடுத்தால் தான் சான்று கிடைக்கும் என்ற சூழல் உள்ளது. இதை கண்டித்து தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 06, 2025 17:02

இந்த சிக்கல் பல ஆண்டுகளாக இங்கே உண்டு...மருத்துவம் படித்தவர்கள் மட்டுமல்லர்...பொறியாளர்களுக்கும்,ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டவர்களுக்கும் இதே பிரச்னை உண்டு ....


பேசும் தமிழன்
ஜூலை 06, 2025 16:14

ஏம்பா வெளிநாட்டில் படித்து டாக்டர் ஆகும் நீங்கள் ....அதே வெளிநாட்டில் டாக்டராக வேலை பார்க்க வேண்டியது தானே ??....உங்களுக்கு இங்கே மருத்துவம் படிக்க தகுதி இல்லை என்று தான் வெளிநாட்டுக்கு பணம் கட்டி படிக்க போகிறீர்கள் .....பிறகு அந்த படிப்பை கொண்டு இங்கே மருத்துவம் பார்க்க நினைப்பது எப்படி சரியாகும் ??


Jack
ஜூலை 06, 2025 14:36

மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்றால் காஜா பாலஸ்தீன் மற்றும் ஆப்கனிஸ்தான் சூடான் ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க தேசங்களில் சேவை செய்யலாம் ..இங்கே தெருவுக்கு நாலு டாக்டர் இருக்காங்க


raja
ஜூலை 06, 2025 13:52

இவங்களுக்கு விடியல் கிடைக்கும் என்று யாராச்சும் sollungappaa...


Parthasarathy Badrinarayanan
ஜூலை 06, 2025 13:51

எதிர்காலத்துக்காக அடிக்கிற கொள்ளையில் அட்வான்ஸ் தந்தால் தப்பில்லை.பல கோடிகளை வெளி நாட்டுக்கு அள்ளித்தரும்போது இங்கு கொடுத்தால் தப்பில்லை. வெளி நாட்டில் படித்த டாக்டர்களுக்கு 50% வரியே விதிக்கலாம்


Sankar Ramu
ஜூலை 06, 2025 15:47

வரிக்கும் லஞ்சத்துக்கும் வித்யாசம் இருக்கு. திராவிட மாடல் லஞ்சம் கேட்குது.


Parthasarathy Badrinarayanan
ஜூலை 06, 2025 13:48

வெளிநாட்டில் படித்த மருத்துவர்கள் இந்தியாவில் தொழில் செய்யத் தடை விதிக்கவேண்டும்.


Dr.Abinath TNMSA Madurai (Die for truth)
ஜூலை 06, 2025 14:20

இந்திய மருத்துவர்களும் வெளி நாடுகளில் பணி புரிய தடை விதிக்க வேண்டாமா? இந்தியாவில் பயின்றவர்களுக்கும் வெளி நாடுகளில் தடை செய்ய வேண்டும்... அப்படித் தானே உங்கள் கருத்து? சிந்திக்காமல் கருத்து சொல்வது பாராட்டிற்குரியது அல்ல தோழரே


Dr.Abinath TNMSA Madurai (Die for truth)
ஜூலை 06, 2025 14:21

மருத்துவம் ஒரு தொழில் அல்ல... புரிந்து கொண்டு பேச வேண்டும் நண்பரே


SUBBIAH RAMASAMY
ஜூலை 06, 2025 14:33

வெளிநாட்டில் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் மருத்துவம் படித்து முடித்து வருகிறார்கள் என்று தெரியாமல் பேசக்கூடாது. உள்ளூரில் சீட் கிடைச்சால் வெளி நாட்டுக்கு ஏன் போகப்போறாங்க.


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 13:04

இவ்வளவு சிக்கல் இருக்கும் போது நீங்கள் இந்தியாவில் டாக்டர் முடித்து இருக்கலாம்


Padmasridharan
ஜூலை 06, 2025 11:56

உள்ளூர்ல மத்தது படித்தவர்களுக்கும் employment office ல மரியாதை இல்லாமல் பேசி அலைக்கழிக்கின்றனர். இங்கும் அதுபோல்தானா சாமி


Minimole P C
ஜூலை 06, 2025 11:48

collect some amount by you all and pay the amount to NS. Otherwise you have to pay at least 2 to 4 points. While paying curse the NS that his whole dynasty shall perish along with DMK.


Velan Vivek
ஜூலை 06, 2025 11:03

இவர்கள் பணம் மட்டுமே குறி எந்த தகுதியும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை