உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 60,000 டன் துவரம் பருப்பு தேர்தலுக்காக கொள்முதல்

60,000 டன் துவரம் பருப்பு தேர்தலுக்காக கொள்முதல்

சென்னை:தமிழக அரசு, ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு வழங்குகிறது. அவற்றை, நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. வரும் ஏப்., - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு, மார்ச் துவக்கத்தில் வெளியாக உள்ளதால் தேர்தல் முடியும் வரை நடத்தை விதி அமலில் இருக்கும். தேர்தல் அறிவிப்புக்கு பின், ரேஷனில் வழங்க பருப்பு, பாமாயில் வாங்க, 'டெண்டர்' கோரினால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இதைத் தவிர்க்க, தற்போது, 60,000 டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பும்; 6 கோடி லிட்டர் பாக்கெட் பாமாயிலும் வாங்க, வாணிப கழகம் டெண்டர் கோரியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை