உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுரவ விரிவுரையாளர் நியமனத்தால் கானல் நீராகும் பேராசிரியர் கனவு

கவுரவ விரிவுரையாளர் நியமனத்தால் கானல் நீராகும் பேராசிரியர் கனவு

சென்னை: கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்வதால், நிரந்தர பேராசிரியர் பணி நியமனம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு உயர் கல்வி துறையின் கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ், 175 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம், 15,000 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. தற்போது, 4,711 பேர், நிரந்தர பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். மீதம், 10,289 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 25,000 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், 7,360 பேர், கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது மண்டல வாரியாக, 560 கவுரவ விரிவுரையாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல், 1ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், 300 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என, கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. பின்னர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2024 மார்ச் 14ம் தேதி, உதவி பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டி தேர்வு, 2024 ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்களும் பெறப்பட்டன. யு.ஜி.சி., 'நெட்' தேர்ச்சி, பி.எச்டி., தகுதிகளுடன் உள்ள பட்டதாரிகள், இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சியுடன் விண்ணப்பித்தனர். ஆனால், தொடங்கிய வேகத்திலேயே அந்த நடவடிக்கை நின்று போனது. நிர்வாக காரணம் என கூறி, உதவி பேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு தள்ளிப் போடப்பட்டது. வழக்குகள் உட்பட பல காரணங்களால், தேர்வு நடத்துவதில் காலதாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்களை அரசு நியமனம் செய்து வருவது, பட்டதாரிகள், பேராசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுரவ விரிவுரையாளர் நியமனத்தால், தங்களின் அரசு பணி கனவு கானல் நீராகி வருவதாக, அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதிய பாடப்பிரிவுகள்

துவங்கி என்ன பயன்?

சேலம், திருப்பூர், சாத்தான்குளம், தொண்டாமுத்துார், சென்னை ஆர்.கே.நகர் ஆகிய அரசு கல்லுாரிகளில், புதிதாக எம்.பி.ஏ., பாடங்கள், கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்டன. அதேபோல், திருப்பத்துார், திருச்சி, ஊட்டி, சென்னை ராணி மேரி, வால்பாறை ஆகிய ஐந்து கல்லுாரிகளில் புதிதாக எம்.சி.ஏ., பாடங்கள் துவங்கப்பட்டன. நல்ல பாடப்பிரிவுகள் துவங்கிய பின்னும், அதற்கான பேராசிரியர்கள் ஒருவர் கூட, இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. கல்லுாரியில் பணியாற்றும் மற்ற பேராசிரியர்களே, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பாடங்களை நடத்தி வருகின்றனர். - சுரேஷ், பொதுச்செயலர், அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kaliraja Thangamani
செப் 04, 2025 15:52

அனைத்து ஆசிரியர்கள் நியமனங்கள் நிரந்தர பணிக்கானவையாக இருக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர்கள் வயிற்றில் அடிக்கிற இந்த அரசு, தவறு செய்கிறது. இந்த சமுதாயத்தில் ஆசிரிய சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்காவிட்டால், சமுதாயம் வெற்றிகரமான புதிய சமுதாயத்தை உண்டாக்க முடியாது. அனைத்து ஆசிரியர் நியமனங்களும் நிரந்தர பணியாக அமைய வேண்டும்.


rvs
செப் 04, 2025 09:17

The higher education department is not in the mood to make a permanent post, because allocation of funds to education in Tamil Nadu is very low compared to other states. Next in the 2022, they came with three GO 248,247, and 246 in one GO experience count to guest lectures but not for asst prof working in private colleges, it d contraversy, they already know the IAS level people creating GO, Article 15 give equal opportunities already known one even though they came with GO some one going to court, then automatically the process delayed. Next, during the application process to asst professor posting, they put new additional GO to extend GO246 to allow the SET appearing candidate eligible to apply, any posting who qualified on the last date application only allowed, this addition put court case , finally it has striked down by high court, because of this SET result delayed, if announced, then the candidate passed has to upload certificate, but because the addition to GO 246 striked down by court, how they can allow. Next failed candidate in SET may ask for refund. So many things d in the appointment process is lenghy one to explain but one thing we need to know that the process could be delayed for many years to manage with guest lectures. The quality of higher education already gone


vbs manian
செப் 04, 2025 08:42

கௌரவ விரிவுரையாளர் நியமனம் பணம் சேமிக்க வழி. இவர்கள் ஏனோ தானோ என்று பணியாற்றுவர். கற்பித்தல் பாதிப்புக்கு உள்ளாகும்.


Vani Jamuna
செப் 05, 2025 19:09

எதையும் உணராமல் இவ்வாறு கூறாதீர்கள்... கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக இதில் எங்கள் வாழ்க்கையை தொலைத்து உள்ளோம்.. எங்கள் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தைப் பாருங்கள்... அவர்கள் எங்களை என்றும் முன்மாதிரியாக ஏற்கும் வண்ணம்தான் எங்களது கற்பித்தல் இன்றளவும் தொடர்ந்து கொண்டுள்ளது.. கல்வியாளர்களாகிய எங்களது உழைப்பை..அரசு சுரண்டல் பண்ணிக்கொண்டிருக்கிறது... கல்வியாளர்களை வஞ்சிக்கும் எவரும் மேன்மையடைந்ததில்லை..எத்தனை திறமையான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம் என்று தங்களுக்கு தெரியுமா...எதைப் பற்றியும் அறியாமல் எண்ணியதையெல்லாம் பேசாதீர்கள்...இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..


புதிய வீடியோ