உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.மு.தி.க.,விற்கு 8 தொகுதிகள்; தி.மு.க., கூட்டணி பேச்சில் முன்னேற்றம்

தே.மு.தி.க.,விற்கு 8 தொகுதிகள்; தி.மு.க., கூட்டணி பேச்சில் முன்னேற்றம்

தி.மு.க., கூட்டணியை விரிவுப்படுத்தும் வகையில், தே.மு.தி.க.,விற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய, நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி விரிவுப் படுத்தப்பட உள்ளது. புதிய வரவாக, தே.மு.தி.க., இடம் பெற உள்ளதாகவும், அதற்கான தொகுதி பங்கீடு பேச்சு, திரைமறைவில் நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hr3vcwg5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு 5 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' என, உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., வாய்ப்பளிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தே.மு.தி.க., வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்பவில்லை. அ.தி.மு.க., கூட்டணி தொடர்ந்து தோல்வி அடைவதால், வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற வேண்டும். கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என, அக்கட்சியினர் விரும்புகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள, கட்சி பொதுக்குழுவில், கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா திட்ட மிட்டுள்ளார். இதற்கிடையில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, ரகசியமாக கூட்டணி பேச்சு நடந்துள்ளது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்கு பின், தே.மு.தி.க., எதிலும் வெற்றி பெறவில்லை. வரும் சட்டசபை தேர்தலில், வாழ்வா, சாவா என்ற நிலை, தே.மு.தி.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பை அளிக்கக்கூடிய, சில ஆயிரம் ஓட்டுகள் இருப்பதால், அக்கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு, தி.மு.க., தலைமை விரும்புகிறது. தி.மு.க.,விடம் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற, தே.மு.தி.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தே.மு.தி.க., வெற்றி பெறக்கூடிய, எட்டு தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க, தி.மு.க., தயாராகி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Balaji
அக் 31, 2025 20:28

" விஜய பிரபாகரன் மெகா வெற்றி" கேப்டன் இல்லாத குறைக்கு நீ போ தலைவா" கேப்டன் இருந்திருந்தா இப்போ சட்டசபை நாளை ராஜ்யசபை அடுத்த"பிரதமர் " தன்மானத்தலைவர் கேப்டன் "விஜயகாந்த்"


Balaji
அக் 31, 2025 20:19

கேப்டன் பாட்டுக்கு தான் காசு ... எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஜயப்பனை" நெருங்கலாம் ...கேப்டனை நெருங்க முடியுமா""ஆதரவின்றி திரிபவர்க்கு மதிய உணவு"அளித்தவர் கேப்டன் " இளைய காமராஜர் கேப்டன் " வாழும் பசும்பொன்னார் கேப்டன் " தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடலை , " பாடி" ஜாதி என்ன ஜாதி " அம்மனுக்கு அன்பு ஒன்றே நீதி என்று வாழ்ந்தவர் எங்கள்" தலைவர் விஜயகாந்த்"


Ashok Kumar
அக் 31, 2025 19:34

ஹாப்பி.


Shanmugavel ChivanuMudhaliyaar
அக் 31, 2025 10:09

தே. மு. தி. க - இறுதி முடிவும் உறுதி முடிவும் எடுக்க எட்டே போதும்.


Shanmugavel ChivanuMudhaliyaar
அக் 31, 2025 10:06

தே. மு. தி க இறுதி முடிவும் உறுதி முடிவும் எடுக்க எட்டே போதும்.


Babu
அக் 30, 2025 23:02

தேமுகவின் தலைமை தவறான முடிவு எடுக்கிறார்கள்


Dhanapalani Kumar
அக் 30, 2025 06:25

விஜயகாந்த் சார்க்கு செய்யும் துரோகம்


ஆர்டர் குமார்
அக் 30, 2025 05:51

வோர்ல்டு ஆர்டர் எப்படியோ... நாட்டு ஆர்டர், மாநில ஆர்டர், வீட்டு ஆர்டர் எல்லாமே.. அவனவன் ஆட கெளம்பிட்டான்.


DMK
அக் 30, 2025 00:13

அந்த 8 சிட்டையும் அதிமுக வென்று விடும். தேமுதிகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட சொல்வார் ஸ்டாலின்.


G Mahalingam
அக் 29, 2025 22:46

சீட்டுகளை விட பெட்டி தான் முக்கியம். ராமதாஸ் திமுக பக்கம். அன்புமணி அதிமுக பக்கம். இரண்டு இடத்திலிருந்து இரண்டு பெட்டிகள் கிடைக்க வாய்ப்பு.


புதிய வீடியோ