உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் உயர்மட்ட சாலைக்கு திட்ட அறிக்கை அமைச்சர் எ.வ.வேலு தகவல் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் உயர்மட்ட சாலைக்கு திட்ட அறிக்கை அமைச்சர் எ.வ.வேலு தகவல் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை:''மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் இடையே, உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க, 1,400 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க., - கிருஷ்ணசாமி: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை, திருமழிசை என, இரண்டு முக்கிய சந்திப்புகள் உள்ளன. ஆறு வழிச்சாலையாக மாறிய பிறகு, அங்கு ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. நசரத்பேட்டை சந்திப்பை கடந்து, அகரம், மேப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பாதசாரிகள் வருகின்றனர். இரு சக்கர வாகனங்களும் ஆயிரக்கணக்கில் அந்த சந்திப்பை கடந்து செல்கின்றன. அங்கு சினிமா நகரம் அமைக்கப்படும் எனவும் துணை முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, அங்கு மேம்பாலம் அல்லது சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.அமைச்சர் வேலு: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, திருமழிசை சந்திப்புகளில் மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை, 23 கி.மீ.,க்கு சேவை சாலையுடன், ஆறுவழிச்சாலை அமைக்கும் பணிகள், 495 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. பாரிவாக்கம், திருமழிசை, தண்டலம், நசரத்பேட்டை ஆகியவற்றை உள்ளடக்கி, மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் இடையே உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்க, 1,400 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த சாலை மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும்.கிருஷ்ணசாமி: பூந்தமல்லி தொகுதியில், பாரிவாக்கம் - பட்டாபிராம் சாலை, இருவழிச் சாலையாக உள்ளது. அதை நான்கு வழிச்சாலையாக அமைத்து தர வேண்டும்.அமைச்சர் வேலு: எனக்கு தெரிந்து, தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் தான், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நான்கு வழிச்சாலைகள் அதிகளவில் அமைத்து வருகிறோம். நான்கு வழிச்சாலைக்கான போக்குவரத்து செறிவு, நிலம் எடுப்பு என்பது குறைவாக இருக்குமானால், நடப்பாண்டில் அந்த சாலை விரிவாக்கம் செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை