கலெக்டரை கண்டித்து ‛தர்ணா
பெரம்பலுார்: பெரம்பலுார் கலெக்டராக இருப்பவர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ். நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய சென்ற கலெக்டர், அங்கிருந்த பணியாளர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பணியாளர்கள் சங்கத்தினர், 300க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 10:00 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். பின் கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.அப்போது, 'இனி இது போல தரக்குறைவாக நடத்த மாட்டேன்' என கலெக்டர் உறுதி அளித்ததால், தாங்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்புவதாக செய்தியாளர்களிடம் சங்கத்தினர் தெரிவித்தனர்.