மின் வாரியத்தில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
சென்னை:தமிழக மின் வாரியத்தில் வேலை வழங்க கோரி, 'அப்ரென்டீஸ்' எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் சங்கத்தினர், சென்னை அண்ணா சாலை மின் வாரிய அலுவலகம் பின்புறம் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களில், ஐ.டி.ஐ., டிப்ளமா, இன்ஜினியரிங் பட்டதாரிகளில், தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.