உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அறிவித்தபடி ஜன., 21ல் போராட்டம்; சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் திட்டவட்டம்

 அறிவித்தபடி ஜன., 21ல் போராட்டம்; சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் திட்டவட்டம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது: தி.மு.க., அரசு பதவியேற்ற பின், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உண்ணாவிரதம், பேரணி, தர்ணா, தொடர் காத்திருப்பு போராட்டம் என, 72 போராட்டங்களை நடத்தியுள்ளோம். இருப்பினும், தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, குழு அமைப்பது, அறிக்கை சமர்ப்பிப்பது, அமைச்சர்களுடன் பேச்சு நடத்துவது என, நான்கு ஆண்டுகளை கடத்தி விட்டார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், நேற்றும் அமைச்சர்கள் தலைமையில், அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடந்திருப்பது வேதனையாக உள்ளது. இதேபோல கடந்த நான்கு ஆண்டில், 10க்கும் மேற்பட்ட பேச்சுகள் நடந்துள்ளன. ஆனாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அமைச்சர்கள் இதுவரை எந்த உத்தரவாதமும் தரவில்லை. நேற்று நடந்த பேச்சுக்கும், அரசு தரப்பில் அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சில அமைப்புகள் மற்றும் சங்கத்தினருக்கு மட்டுமே அழைப்பு கிடைத்துள்ளது. எனவே, சி.பி.எஸ்., எனும் பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் சார்பில் அறிவித்தபடி, வரும் ஜனவரி 21ல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போாட்டத்தை துவக்குவோம். தேர்தலுக்கு முன் போராட்டங்கள் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ