உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1000 கோடி ஊழலை கண்டித்து 17ம் தேதி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

ரூ.1000 கோடி ஊழலை கண்டித்து 17ம் தேதி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது வீடியோ பதிவு:

அமலாக்கத் துறை செய்திக்குறிப்பில், 'டாஸ்மாக்' நிறுவனம், அதற்கு மது வகைகளை வழங்க கூடிய ஆலைகள், பாட்டில் நிறுவனங்கள், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளன. அந்த பணம் எல்லாம், அரசியல் லாபத்திற்காக, தி.மு.க.,வுக்கு சென்றுள்ளதை பார்க்கிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=evr8la4o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பத்து நாட்களாகவே, தி.மு.க., எதற்காக பல பிரச்னைகளை கையில் எடுத்து திசை திருப்பியது என்பது, இதன் வாயிலாக தெரியவந்துள்ளது. டில்லி, சட்டீஸ்கரில் நடந்ததை விட, டாஸ்மாக் ஊழல் மிகப்பெரியது.அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தபோது, நள்ளிரவில் முதல்வர், துணை முதல்வர் சென்று பார்த்தனர். அவரை விடுவிக்க அரசே போராடியது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதிலிருந்தே சாராய துறை, தி.மு.க.,வுக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்.மதுவின் கோரப் பிடியில் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும். வரும், 17ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து, ஒவ்வொரு டாஸ்மாக் கடையையும் முற்றுகையிட போகிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும். முதல்வரே பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

S.Martin Manoj
மார் 14, 2025 21:09

பாத்து மல உன் வீட்டுக்கு வாடகை கொடுகிறவன் எல்லாம் உம்மோட வீட்டுக்கு முன்னாடி போராட வந்துற போரான்


மலை நேசன்
மார் 14, 2025 19:55

வாழ்த்துக்கள் தலைவா, உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்


Ray
மார் 16, 2025 08:31

போராட்டம் வழக்கம்போல வெட்டியா புஷ்வாணமா போக வாழ்த்துக்கள். ED மேல கேஸ் போடறாங்களாம்ல.


raja
மார் 14, 2025 12:47

உருகின சர்க்கரையுடன் பல்லியுடன் சேர்ந்த பப்பாளி விதையை மிளகு என்று கொடுத்து பொங்கல் தொகுப்பில் 500 கோடி ஆட்டையை போட்டப்பவே உள்ளே வைத்து கும்மு கும்முன்னு வச்சி செஞ்சி இந்த பக்கிட்டு வச்சிருந்தால் இப்போ 1000 கோடிக்கு வந்துறுப்பாங்கலா என்று தமிழர்கள் கேக்ராங்க......


Ramesh Sargam
மார் 14, 2025 12:26

தமிழகத்தில் நடக்கும் திமுக அரசின் ஊழல்களை கண்டித்து வருடம் முழுவதும் போராட்டம் நடத்தவேண்டும் அண்ணாமலை அவர்களே. நீங்கள் மற்ற வேலைகளை பாருங்கள். நான் வேண்டுமென்றால் போராட்டத்தை தொடர்ந்து செய்கிறேன்.


theruvasagan
மார் 14, 2025 11:13

கஜானாவையே கொள்ளையடிக்கறவனை சில்லறை திருடன் என்று சொன்னால் கோபம் வருதா. என் மானம் போச்சுன்னு சொன்னவங்க மேல மானநஷ்ட வழக்கு கூட போடுவான். ஜாக்கிரதை. அதனால எதிராளி பெருமை தெரியாம சீப்பா சொல்லிகொண்டு திரியாதீங்க.


Sudha
மார் 14, 2025 10:37

கேஜரிவால் பாதையில் தமிழகம்? முதலில் சிசோடியா? அதாவது


Ray
மார் 15, 2025 15:32

அவன் ED மேல கேஸ் போடுவேன்னு சொல்லிட்டானே


Sudha
மார் 14, 2025 10:35

சொல்றதுக்கு ஒண்ணுமில்லை


Ray
மார் 16, 2025 08:34

சுருக்கமா சொல்லுன்னு சொல்வார்கள் சுருக்கென்று சொல்வதில் சூரர்கள் சிலர் சுருக்கா சீக்கிரமா சொல்லுன்னு சொல்வார்கள் தஞ்சாவூர் பக்கம் சொல்லாமல் சொல்வார் சிலர் சொல்லாமல் கொல்வார் சிலர் சொல்ல முடியாதவர் சிலர் சொல்ல எதுவுமில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார் சிலர்.


Mahesh Mu
மார் 14, 2025 09:43

நாட்டையும் மக்களையும் முன்னேற்ற வழி செய்கிறார்களோ இல்லையோ.. ஆட்சியைபிடிக்க எல்லா வழிகளிலும் ஊழல் செய்ய என்னவெல்லாம் பண்ணமுடியுமோ அத்தனையும் செய்கிறார்கள் இந்திய நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும்.. ஏறக்குறைய இந்தியா 80 வருடங்களாக வளரும் நாடுகளில் வரிசையிலேயே இருக்கிறது.. ஆட்சியை அதிகாரத்தைப் பிடிக்க இனி மக்களையும் கொல்ல தயங்க மாட்டார்கள்... இயற்கையும் பிரபஞ்ச விதிகள் மட்டுமே இவர்களிடமிருந்து பலமற்ற மக்களையும் மற்ற உயிர்களையும் காப்பாற்ற முடியும்......


Pandianpillai Pandi
மார் 14, 2025 09:20

அரசு பணத்தை இலட்சம் கோடி பணத்தை கார்பொரேட் கம்பெனிகளுக்கு தள்ளுபடி செய்தும் அதற்கீடாக அன்பளிப்பு என்ற போர்வையில் லஞ்சத்தில் கொழுத்து நாட்டையே நாசம் செய்து கொண்டிருக்கும் பாஜக அடிமை அ தி மு க அரசுடன் கைகோர்த்து கொல்லப்புர கொல்லையடித்தது மட்டுமல்லாமல் டாஸ்மாக் படிப்படியாக மூடப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வாக்களித்த மக்களின் முகத்தில் கரியை பூசியது யார்? தற்போது டாஸ்மாக் போராட்டம் என்று சொல்லும் உங்களுக்கு நா கூசவில்லையா? உடம்பு நடுங்கவில்லையா? அ தி மு க அரசில் கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காணாமல் இருந்து விட்டு தற்போது வேடம் போடுவது எதை காட்டுகிறது ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக தான் உள்ளது. ஆனால் அ தி மு க வில் அம்மையார் ஜெயலலிதா அவர்களை உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கிய பிறகும் அந்த கட்சிக்குஉறுதுணையாக பாஜக இருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். பாஜக ஒரு ஓநாய் கூட்டம் என்பதை மக்கள் அறிவார்கள்.


Mettai* Tamil
மார் 14, 2025 09:57

டாஸ்மாக் முதற்கொண்டு ஏகப்பட்ட ஊழல்கள் செய்யும்போது உங்களுக்கும் நா கூசவில்லையா? உடம்பு நடுங்கவில்லையா? .இது விஞ்ஞான ஊழல் என்பதால் உங்க உடம்பு நடுங்காதோ ?


M R Radha
மார் 14, 2025 10:29

விஞ்ஞான ஊழலை இப்டி கொச்சைப்படுத்தலாமா? ஒனக்கு 200ரூவா கொடுக்குறாங்கன்றதாலேயே த்ரவிஷன்கள் செய்வதை நியாய படுத்தலாமா ? குலம் விளங்குமா?


RaNaMurty
மார் 15, 2025 21:23

ஊழல் விஞ்ஞான ஊழலில் கரை கண்டவர்கள் தீயசக்தி தீமூகாவினர். கருணாநிதி காலத்திலேயே மதுவிலக்கை ரத்து செய்து தாலியறுத்த கொலைகார பாவிகள். கார்ப்பரேட் தள்ளுபடியாம் அப்படின்னா தீராவிட தற்குறிகளுக்கு என்னான்னே தெரியாது. கடன் குடுத்ததும் தீமூகா கூட்டணி கயவர்கள்தான். எல்லாத்துலயும் கமிஷன் ஊழல். அண்ணாலை போராட்டம் வெல்லட்டும்


sridhar
மார் 14, 2025 08:42

அனுமதி இல்லை என்று 16ம் தேதி இரவு சொல்லுவாங்க , ஆனாலும் நீங்க நடத்துங்க , எங்க ஆதரவு உண்டு.


சமீபத்திய செய்தி