உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவி விவகாரத்தில் போராட்டம் உண்மையான அக்கறையால் அல்ல: ஐகோர்ட் நீதிபதி வேதனை

மாணவி விவகாரத்தில் போராட்டம் உண்மையான அக்கறையால் அல்ல: ஐகோர்ட் நீதிபதி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன; உண்மையான அக்கறையால் அல்ல' என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'இதை அரசியலாக்க வேண்டாம்' என்று கூறியுள்ளது.

பொறுப்பு தேவை

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினார். அப்போது, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து, பா.ம.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காவல் துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர். போலீசார் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,'' என, முறையீடு செய்தார்.அப்போது நீதிபதி கூறியதாவது:இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன; உண்மையான அக்கறையால் அல்ல. ஊடகங்களும் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்படவில்லை. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்து, செய்தி தொலைக்காட்சிகளில், 'ஊடக விசாரணை' நடத்தப்பட்டு வருகிறது. இப்பிரச்னையை பற்றி, ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அவர்கள் செய்யும் விதம் ஏற்புடையதாக இல்லை.மாணவி பாலியல் விவகாரத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்; மோசமான சம்பவத்தை, ஏன் இந்த அளவுக்கு பிரபலப்படுத்துகிறீர்கள்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு என்ற பெயரில், அந்த பெண்ணை அவமானப்படுத்துகிறீர்கள். மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அனைவரது கடமை. இந்த சம்பவத்தை பொறுத்தவரை நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாலின பாகுபாடு

அப்போது, ''இந்த போராட்டம், பெண்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது,'' என்றார், வழக்கறிஞர் கே.பாலு. இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:இந்த விஷயத்தில் ஆண், பெண் என்று ஏன் பாலின பாகுபாடு பார்க்கிறீர்கள்; பெண்களுக்கு மட்டும் தான் பிரச்னையா? பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனத்தை செலுத்தாமல், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குகின்றனர். இந்த காலத்தில் வாழ நான் வெட்கப்படுகிறேன்.அண்ணா பல்கலை மாணவி பாதுகாப்புக்காக, போராடுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள், எத்தனை பேர் தன் தாய், மனைவி, மகளுக்கு மரியாதை, சுதந்திரம் வழங்குகிறீர்கள்? முதலில் தங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இப்போது, ஒரு மாணவி மட்டுமா பாதிக்கப்பட்டு உள்ளார்; பெண்கள் பல இடங்களில் பாதிக்கப்படுகின்றனர். ஏன் பெண்களுக்கு எதிரான சம்பவத்துக்கு மட்டும் போராடுகிறீர்கள்; ஆண்கள் பாதிக்கப்படவில்லையா; பாதிப்பு என்றால் அனைவருக்கும் ஒன்று தான்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில், நாம் அனைவரும் இணை குற்றவாளி தான். இதற்கு நாம் அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்; வெட்கப்பட வேண்டும்.

கண்காணிப்பு

இவ்விவகாரத்தில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கிறது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதற்கு மேல் என்ன வேண்டும்?இந்த சமூகம் முழுதுமாக பெண்களை அடிமைப்படுத்துவது மற்றும் அவர்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டவிழ்த்து விடுவது ஏன் என்பதை, சுயபரிசோதனை செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக, உண்மையான அக்கறையின்றி அரசியலாக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள். போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது.இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

M Ramachandran
ஜன 03, 2025 17:14

பழைய கால ஊடகங்கள் உண்மையானா குற்றவாளிகள் மற்றும் பின் புலத்தில் உள்ளவர்கள் இவர்களை வெளிச்சம் போட்டு காட்ட முயன்றுள்ளன. ஆனால் இப்போது உள்ள முக்கியமாக பல தமிழக ஊடகங்கள் மனசாட்சியற்று அவர்களின் பணி யாட்கள் கனமான கை பையுடன் மனசாட்சியை விற்று விட்டு சில ஊடகங்கள் ஆளும்கட்சியின் பிரசுரங்க்களாக கேட்ட பெயருடன் என்ற பெயர் எடுத்துள்ளமை வருத்தம் கொள்ள வைக்கிறது. வடக்கிலும் சில ஊடகங்கள் அயல் நாட்டு பணத்திற்கு வாயயை பிளந்து நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளை விக்கின்றன. இவைகளை நீதி மன்றங்களாலும் கட்டு படுத்த இயலவிலை.


Oviya Vijay
ஜன 03, 2025 15:38

சங்கிகளுக்கு சங்கு ஊதி இருக்கிறார் நீதிபதி... அவரது கருத்து அருமை.


Saai Sundharamurthy AVK
ஜன 03, 2025 14:12

அரசியல் ஆகாமல் அவியலா செய்ய முடியும். குற்றவாளி திமுக அமைச்சர்களுக்கு வேண்டியவனாக இருக்கிறான். மேலும் அந்த சார், உதயநிதியா அல்லாது எம். சுப்ரமணியனா என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். நீதிமன்றம் அரசியல் கருத்தை தெரிவிக்க கூடாது. நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் நேர்மை காட்ட வேண்டும். திமுக சிபாரிசில் மயங்கக் கூடாது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 03, 2025 13:08

மாண்புமிகு நீதிபதி அவர்கள் மேற்கு வங்காளத்தில் நடந்த போராட்டங்கள் பார்க்க வேண்டும். அங்கு எந்த நீதிபதியும் உங்களை போல் கருத்து சொல்ல வில்லை. நீங்கள் கருத்து கூறுவதை பார்த்தால் குற்றம் சாட்டப்பட்டவர் அவருடன் இருந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால் சந்தேகத்தை குற்றம் சாட்டப்பட்வருக்கு சாதகமாக்கி அவரை விடுதலை செய்து தியாகி ஆக்கி விடுவீர்கள் போல் தெரிகிறது.


Dharmavaan
ஜன 03, 2025 10:00

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க காரணமே இப்படி குற்றவாளிக்கு அதை மறைப்பவனுக்கு கோர்ட் காட்டும் கரிசனம்தான்


Dharmavaan
ஜன 03, 2025 09:52

நீதியின் கருத்து தவறு. மக்கள் விழிப்புணர்வு ஏற்பட இப்போராட்டங்கள் தேவை. இல்லையேல் இது மூடிவிடப்படும் திமுக கொத்தடிமை கோர்ட் இப்படி எல்லா வழிகளையும் அடைக்கிறது


Kanns
ஜன 03, 2025 09:51

What Judge told is Correct But he should not be Silent on PowerMisusers-RulingParties etc etc. Judges MUST NEVER be BIASED If Quality-Fast Justice is to be Available to People-Nation. Here Both Girl& Molestor MUST be Arrested/ Prosecuted/ Convicted, Being UnDoubted AntiSociety Criminals Girls Indulge in AntiSociety Indecent Dressing/ SexHungry Behaviours-Acts in Public Places Said man Induced by her Exploited said Situations. Constitutional Guarantees of Freedom Equality etc CANNOT be Given to Anybody Who Misuse Freedoms esp with Biased Laws, Violates Responsibilty or Who Disturbs Others, Society, Nation etc. SACK& PUNISH All Judges who are BIASED, Case-Hungry, NOT PUNISHING Any POWER-MISUSING Rulers, Officials esp Investigators-Police, Bureaucrats, Judges, NewsHungry BiasedMedia, VoteHungry Parties, Vested False Complaint Gangs women, geoups/ unions, SCs, advocates etc etc. SHAMEFUL JUSTICE


peeyesyem
ஜன 03, 2025 09:10

Does it mean that GNANASEKARAN IS accused Have you had witness that he only done that crime? If the police is doing its duty without doubt Judge SIR tell me WHO is that SIR if you know.


Barakat Ali
ஜன 03, 2025 08:42

வேதனைப்பட்ட ஆனார் சர்வாதிகாரத்துக்குத் துணைபோகும் நபரா ? அல்லது ஒரு கழகக் கண்மணியா? சட்டம் ஒழுங்குக்கு சவால் விடாமல் நடத்தப்படும் போராட்டம், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் .....


SIVA
ஜன 03, 2025 08:33

இதில் பாதிக்க பட்ட பெண்ணை பற்றி ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களில் அந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் பற்றி அவர்கள் தவறு செய்ததால் தான் பிரச்சனை நடத்துது போன்று விவாதம் நடை பெற்றது, இப்போது வெட்கப்படும் நல்லவர்கள் அந்த ஆர் எஸ் பாரதி மீடியாக்கள் செய்தது தவறு என்று மட்டும் சொல்லிவிட்டு, அதுக்கும் அப்புறம் போய் லீவு போட்டு ஓரமா போய் உட்கார்ந்து வருத்தபட்டுக்கோங்க .... சென்னை அண்ணா நகரில் ஒரு பத்து வயது பெண் பாதிக்கப்பட்டால் புகார் கொடுத்த பெண்ணின் பெற்றோர் அந்த சிறுமியின் முன் அதன் பெற்றோர் தாக்கப்பட்டனர் போலீசாரால், அவர்கள் வழக்கில் நீதி மன்றம் அந்த வழக்கு முறையாக விசாரிக்க பட வில்லை என்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இட்டு உள்ளது, இந்த வழக்கிலும் அந்த பெண்ணை குற்றம் சொல்லும் விதமாக வழக்கு பதிவு செய்ய பட்டு உள்ளதாக நீதி மன்றம் கூறி உள்ளது. இந்த நிலையில் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தாமல் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் ...


புதிய வீடியோ