உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,

அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, விஸ்வ ஹிந்து பரிஷத் போராட்டம் தொடரும் என, மாநில பொதுச்செயலர் பாலமணிமாறன் கூறினார்.விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி: அமைச்சர் பொன்முடியின் பேச்சு காணொளியில் வந்ததும், விஸ்வ ஹிந்து பரிஷத் உடனடியாக இரண்டு அறிக்கையை வெளியிட்டது. அவர், அமைச்சர் பதவியில் இருந்து, உடனே நீக்கப்பட வேண்டும்; பகிரங்கமாக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ql0zndsb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனே, அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஏனென்றால், அவர் பேசிய பேச்சுகள் விவரிக்க இயலாதவை.

ஒவ்வொரு ஹிந்துவையும், பெண்களையும் புண்படுத்த கூடியதாகும். அவர், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தமிழக முழுதும் தொடரும். இவ்வாறு பாலமணிமாறன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 16, 2025 12:32

தீயமுகவிற்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு ஹிந்து வீட்லயும் போய் கேட்கணும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 16, 2025 11:58

திமுக தமிழ் வளர்க்கும் இலட்சணம் இது தான். அடுத்தவர் மதத்தை இழிவு படுத்தி பேசியதை கேட்க மாற்று மதத்தவருக்கு தேன் சாப்பிடுவது போல தற்காலிகமாக இனிக்கும். திமுகவிற்கு ஓட்டளிக்கும் இந்துக்கள் தங்கள் பிணத்திற்கு தாங்களே கட்டைகள் அடுக்குவது போலத்தான். 1000 இலவச பஸ் அடுத்த வருடம் 2000 உரிமை தொகை என்ற பெயரில் இந்து பெண்கள் வாங்கிக் கொண்டு திமுகவிற்கு ஓட்டு போட்டால் அது இந்து பெண்களை ...என்று திமுக முத்திரை குத்தி விடும். இந்து பெண்களை மகளீர் அணிகள் தயவு செய்து திமுகவை ஒழிக்க விடுங்கள்.


பேசும் தமிழன்
ஏப் 16, 2025 11:10

மானமுள்ள இந்துக்கள் யாரும் திமுக கட்சிக்கு ஓட்டு போட மாட்டான்..... ஏனென்றால்... இவர்கள் இந்து மதத்தை பற்றி தவறாக பேசிய பேச்சுக்கள் அப்படி !!!


angbu ganesh
ஏப் 16, 2025 09:42

கேட்டுட்டே ஆட்சி அவனை சிறையில் தள்ளனும் ஏன் முதல்வராய் இன்னும் தயக்கம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 09:29

டோட்டலா கவனத்தைத் திசை திருப்பியாச்சு ..... ஊழல், சட்டம் ஒழுங்கு, அடாவடி கைதுகள் பத்தி எவனும் இப்போ யோசிச்சு கூட பார்க்க மாட்டான் ..... இதுதான் திமுகவுக்கும் வேணும் .........


Oviya Vijay
ஏப் 16, 2025 08:20

இவரது பேச்சு திமிர்த்தனத்துடன் கூடிய ஆணவத்தின் உச்சம்... ஊழல் வழக்கில் தண்டனை அறிவிக்கும் நேரத்தில் தங்கள் வயோதிகத்தை கருத்தில் கொண்டு தனக்கும் தன் மனைவிக்கும் குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் கெஞ்சியது மறந்துவிட்டது போல. தற்போது அந்த வழக்கில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் தான் வெளியில் உள்ளீர்களே ஒழிய வழக்கில் இருந்து விடுதலை பெறவில்லை... ஜெயிலில் களி திங்கப் போவது உறுதி என்பதனை நினைவில் கொள்ளுங்கள்...


பாரதி
ஏப் 16, 2025 07:36

உண்மை. நன்மை. இது போன்ற நபர்களுக்கு இப்படி பேச இனி தைரியம் வரக்கூடாது...


Ramesh Sargam
ஏப் 16, 2025 07:22

மன்னிப்பு கேட்டாலும் அவரை மன்னிக்க கூடாது. அவர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.


தொளபதி
ஏப் 16, 2025 07:16

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நம்ம ஜோஸஃப் தம்பி இந்த விஷயத்தில எந்த எதிர்ப்பும் தெரிவிக்கலையே? விஷய ஞானம் இருக்கோ இல்லையோ, வக்ஃப் மாதிரி எல்லா விஷயத்திலயும் உள்ளே புகுந்து அட்டெண்டன்ஸ் போட்ரவரு, இதுல மட்டும் ஏன் சைலண்டா இருக்கார்? பெரியார் சிஷ்யனா காமிச்சிக்கிறார் அதுனால இந்த பேச்சு ஓகேவா. என்ன தான் வேஷம் போட்டாலும் இந்து மத எதிர்ப்பு நிலை வெளியே வந்திருச்சோ


vijai hindu
ஏப் 16, 2025 23:08

யாரை ஜோசப்ப சொல்றீங்களா அது ஒரு டுபாக்கூர் .அதுவும் கிட்டத்தட்ட இந்துமத எதிரி தான். கட்சி ஆரம்பிச்ச உடனே பெரியாருக்கு போய் மாலை போடும் போது அதோட லட்சணம் தெரியுது.


Ramona
ஏப் 16, 2025 07:13

இவன் மன்னிப்பு கேட்டால், பேசின வன்மம் மறைந்து போயிடுமா, இல்ல இவனோட இந்த மாதிரியான பேச்சு குறைந்து விடுமா,அல்லது இந்துக்களுக்கு தன்மானமுள்ள உணர்வு, இவன் மீது கோபம் வந்துவிடுமா, நீதிமன்ற தலையிடுமா? எதுவுமே நடக்காது. இதுவும் கடந்து போகும், மக்கள் இதையும் மறந்துவிட்டு ,மக்கள் கைகளில் மீண்டும் கையில பணம், பாட்டில், பொட்டலம் வந்தா போதும், மீண்டும் அதே கதை தாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை