உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேலை ஏந்துவதா

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேலை ஏந்துவதா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேல் ஏந்துவதற்கு திருமாவளவனுக்கு என்ன தகுதி இருக்கிறது'' என ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியதாவது: மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும் போது, 'எந்த பிராமணர்களாவது முருகன் என்று பெயர் வைத்துள்ளார்களா' என பிராமணர்களை வம்புக்கு இழுத்தது கண்டிக்கத்தக்கது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9jrk0n3v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'பிராமணர்கள் யாராவது ஒருத்தர் முருகன் என்று பெயர் வைத்திருந்தால் என்னிடம் காட்டுங்கள். நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்' என்று கூறும் திருமாவளவனிடம் முருகன், கந்தன், குமரன் என ஏராளமான தமிழ் பெயர்கள் கொண்ட பிராமணர்களை நேரில் அழைத்து வந்து காண்பிக்க தயார். முருகப்பெருமானை ஸ்ரீகந்தர், சுப்பிரமணியர், சுகுமாரர் என்றும் சனாதனவாதிகளான நாங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்வோம். இதில் சனாதனத்தை எதிர்ப்போம் என்று ஹிந்து மதத்தையும், பிராமண சமூகத்தையும் எதிர்க்கும் திருமாவளவனுக்கு என்ன பிரச்னை. தீபத்துாணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு முருகனின் வேல் ஏந்துவதற்கு என்ன தகுதி இருக்கிறது. சனாதனத்தை எதிர்ப்போம் என்று கூறிவிட்டு மேடையில் முருகனின் வேலை கையில் ஏந்துவது முருகனின் புனிதமான வேலை அவமதிப்பதற்கு சமம். கையில் வேல் ஏந்துவது எல்லாம் தேர்தல் நாடகம் என ஹிந்துக்களுக்கு தெரியும். யாரை ஏமாற்ற இந்த வேடம். ஈ.வெ.ரா., வழியில் வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திருமாவளவன், தன் தந்தை ராமசாமி பெயரை தொல்காப்பியன் என்று பெயர் மாற்றியதற்கு காரணம் என்ன. ராமசாமி என்ற பெயர் அருவருக்கதக்க பெயரா. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Chandhra Mouleeswaran MK
டிச 25, 2025 10:00

தனது ஜாதிப் பெயரைச் சொல்லிச் சலுகைகளையும் மானியங்களையும் ஒருக்கீடுகளையும் இதுகளுக்கும் சேர்த்து வரிகட்டி அழும், ஜாதியினரின் பணத்தில் இருந்து ஜொள்ளு விட்டுக் கொண்டு வாங்கிக் கொள்ளும் போது எல்லாம் இந்த இனமானம்.


Chandhra Mouleeswaran MK
டிச 25, 2025 09:44

அரை ப்ளேட் பிரியாணிக்கும் ஐநூறு ருப்பீஸ் பணத்திற்கும் அடிமைஆகி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு மதம் மாறி கொண்டவர்கள்


Anantharaman Srinivasan
டிச 24, 2025 23:50

கூலிக்கு மாரடிக்கிறவனுக்கெல்லாம் பதில் சொல்லி திருத்த முடியாது.. பிழைப்பு அப்படி. பல வருடங்களாக கட்டை அப்படியே ஊறிப்போச்சு.


T.Senthilsigamani
டிச 24, 2025 17:31

பிராமண துவேஷம் கொண்டு பிராமணர்களை நிந்தனை செய்யும் திருமாவை நோக்கி ,கண்ணீருடன் தர்ப்பையும் நீருமாக ஒரு பிராமணர் இட்டால் போதும் , திருமாவின் முற்றழிவை தெய்வங்களாலும் தடுக்க முடியாது . பிராமண சமுதாயத்தின் சாந்தமான சாத்வீக குணமே , திருமா போன்ற அரசியல் வியாதிகளின் ராட்ஷச ரஜோ குணத்தை நெய்யூற்றி வளர செய்கிறது .


duruvasar
டிச 24, 2025 15:11

இதுக்கே இப்படி கேள்வி கணைகளை தொடுத்தால் 2026 தேர்தல் தேதி அறிவித்தபின் சிதம்பரம் கோவிலில் அங்கப்ரதக்ஷனம் செய்ய போவதாக பேசிக்கொள்கிறார்கள் அப்போ கேட்க கேளிவிகளே இருக்காது. எல்லாம் பொட்டி சொல்லே மந்திரம் வகை. இதுகளுக்கு கொள்கை என்று எதுவுமில்லை. அடுத்து தோலர்கள் திருப்பரங்குறம் வருவார்கள் பொறுத்திருங்கள். ஐயா ஜவாஹருல்லா வரவும் வாய்ப்பிருக்கிறது. . பொறுமையுடன் இருங்கள்


Raj Kamal
டிச 24, 2025 15:03

ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் - வேல வெட்டி ஏதும் இல்லன்னா கண்டனமாவது விட்டா தானே வயிறு நிறையும். அதுகூட இல்லன்னா, அப்புறம் எதுக்குத்தான் அப்படி ஒரு கட்சி இருக்கணும்?


SUBRAMANIAN P
டிச 24, 2025 14:10

எப்படி இவரெல்லாம் எம் பி ஆனாரோ..


Chandhra Mouleeswaran MK
டிச 25, 2025 10:06

இதுகூடத் தெரியாதா?


naranam
டிச 24, 2025 14:03

திருமா பேச்சை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.


Rengaraj
டிச 24, 2025 13:09

திருமாவளவன் அமைதியான ஒரு சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையில் தனது வார்த்தைகளால் ஒரு கொடிய நச்சை கக்குகின்ற வேலை செய்கிறா்


Venugopal S
டிச 24, 2025 13:05

ஏன்? முருகனின் வேல் சக்திகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று ஏதேனும் சட்டம் போட்டு உள்ளார்களா?


Anonymous
டிச 24, 2025 15:41

முருகனை இல்லை என்று கூறி, ஏற்று கொள்ளாதவர்களுக்கு, முருகனின் வேல் எதற்கு? கேள்வி கேட்கும் முன்னாள் கொஞ்சம் யோசியுங்க வேணுகோபால்.


Chandhra Mouleeswaran MK
டிச 25, 2025 09:52

பிறந்த நாட்டையும் மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே?


புதிய வீடியோ