சென்னை: ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், 'புரோபா - 3' செயற்கைக்கோள்களுடன், 'இஸ்ரோ'வின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் , வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோள் மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிறுத்தி வருகிறது. அதன்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய, 'புரோபா - 3' பெயரில் இரு சிறிய செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது. அவற்றின் எடை, 550 கிலோ. இந்த செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் நேற்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i19hxp4e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான, 25 மணி நேர, 'கவுன்ட் டவுன்' நேற்று முன்தினம் மாலை, 3:08 மணிக்கு துவங்கியது. நேற்று ராக்கெட் ஏவும் பணி, இறுதி கட்டத்தை எட்டியது. திடீரென மாலை, 3:10 மணிக்கு, ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இன்று மாலை, 4:12 மணிக்கு ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது. சில மணி நேரங்களுக்கு பின், 'புரோபா 3' செயற்கைக் கோள்களை சுமந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட், இன்று மாலை, 4:04 மணிக்கு ஏவப்படும் என, இஸ்ரோ தெரிவித்து இருந்தது.இதன்படி, சரியாக மாலை 4:04 மணிக்கு 'புரோபா 3 ' செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.,-சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
திறமைக்கு சான்று
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: இந்தியா மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியது. பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் நடப்பு மாதத்தில் ஏவப்பட உள்ளது. தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. பி.எஸ்.எல்.வி., என்றாலே வெற்றி என்பதை உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்கு இன்றைய நிகழ்ச்சி சான்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி
இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய யூனியனின் செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, பிஎஸ்எல்வி-சி59/ புரோபா 3 திட்டம், ஏவுதலுக்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளது. இந்தியாவின் 'நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்', இஸ்ரோ, ஐரோப்பிய யூனியனின் விண்வெளி நிலையம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நோக்கங்களுக்கு சான்றாக பி.எஸ்.எல்.வி.,யின் செயல்திறன் அமைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இஸ்ரோ கூறியுள்ளது.