உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுப்பணித்துறை சிறப்பு அதிகாரி திடீர் ராஜினாமாவால் பரபரப்பு

பொதுப்பணித்துறை சிறப்பு அதிகாரி திடீர் ராஜினாமாவால் பரபரப்பு

சென்னை:பொதுப்பணித்துறையில் சிறப்பு அதிகாரியாக, தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வந்தவர், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொதுப்பணித்துறையில் அமைச்சர், செயலருக்கு அடுத்து முதன்மை தலைமை பொறியாளர் பதவி முக்கியமானது. அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அதிகாரிகள், அலுவலர்கள் பதவி உயர்வு, பணியிடமாற்றம் உள்ளிட்ட பணிகள், அவரது மேற்பார்வையில் நடக்கும். இப்பதவியில், 2021 முதல், 2023 வரை இருந்தவர் விஸ்வநாத். இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு, சிறப்பு பணி அலுவலர் பதவி வழங்கப்பட்டது.அரசின் முக்கிய திட்டங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரமும் கிடைத்தது.செயலர், முதன்மை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர், முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, இவருடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை முதல் தளத்தில், துறையின் செயலர்களுக்கு இணையான அறையும் ஒதுக்கப்பட்டது. அரசு வாகனம், டிரைவர், உதவியாளர் மட்டுமின்றி, பல்வேறு சலுகைகள் கிடைத்தன. டில்லியில் புதிய அரசு விருந்தினர் இல்லம் கட்டுமானம் தொடர்பான முன்னேற்பாடுகளை கவனித்து வந்தார். இந்நிலையில், திடீரென குடும்ப சூழ்நிலை காரணமாக, தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, அலுவலகத்தை பூட்டிவிட்டு விஸ்வநாத் சென்றுள்ளார். அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, அவர் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுப்பணித் துறை வட்டாரத்தில், இவரது ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
ஜன 31, 2025 18:51

இவர் எந்த மந்திரி கீழே வருகிறார் விளங்கவில்லை


தமிழன்
ஜன 31, 2025 08:20

வேலூர்காரரு பங்கை இவருக்கு சரியா கொடுக்கலை போல அதான்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை