உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே... என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல்

‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே... என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல்

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ பீம்சிங் இயக்கத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' படம் இன்றைய ஆகஸ்ட் 12ம் நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்பு 1960ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். இதன்மூலம் இன்று 66வது ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் கமல்.இதில் 4 வயதான கமல், 'தென்னகத்து திரைவானுக்கு ஏ.வி.எம். அளிக்கும் குழந்தை நட்சத்திரம்' என்கிற டைட்டில் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் படத்தில் 'சுயம்புவாக' தந்த நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார்.தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, சிங்களம், ஹிந்தியிலும் ‛களத்துார் கண்ணம்மா' ரீமேக் ஆனது. இதில் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் டெய்சி ராணி என்பவர். படத்தை தயாரித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வீட்டுக்கு கமல் சென்றபோது அவரின் சுட்டித்தனத்தை பார்த்து வியந்து, அந்த படத்தில் நடிக்க வைத்து இருக்கிறார் மெய்யப்ப செட்டியார்.குழந்தை நட்சத்திரமாக சில படங்கள், பின் இளம் வயதில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் என நடித்து அதன்பின் கதாநாயகனாக உயர்ந்து இன்று வரை கதாநாயகனாகவே நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை உள்ளடக்கியவர் கமல்ஹாசன். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.பல புதிய தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர். அவருடைய ரசிகர்கள் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் நிறைய பேர் உள்ளனர். தற்போது ராஜ்யசபா எம்.பி. ஆகவும் பதவி வகித்து வருகிறார்.https://twitter.com/avmproductions/status/1954801441110982825அவரது 65 வருட திரையுலக பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் அவரை குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அறிமுகப்படுத்திய ஏவிஎம் நிறுவனம் அப்படத்தின் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “65 வருடங்களுக்கு முன்பு 'களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமாகி மில்லியன் கணக்கானவர்களின் இதயத்தைத் தொட்டவர். நமக்கு உணர்வுகளையும், இசையையும் மற்றும் ஒரு குழந்தை மேதை கமல்ஹாசனையும் அளித்த திரைப்படம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு மைல் கல், என்றென்றும் நினைவில் நிற்கும்,” என வாழ்த்தியுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

theruvasagan
ஆக 12, 2025 20:03

நடிகர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் பாடகர் இப்படி அவருடைய பல பரிமாணங்களை சொன்னீங்க. ஆனால் முக்கியமான இன்னும் சிலதை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். ஆண்டவர் என்ற பரிமாணத்தை சொல்லலையே. எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சவராச்சே. அப்புறம் ஊழலை எதிர்த்து டார்ச் லைட்டால் டிவியை ஒடச்சிட்டு கடைசியி்ல் கேவலம் ஒரு பதவிக்காக மானம் மரியாதை முதலான சகலத்தையும் ஊழல் காலடியில் கிடத்திவிட்டு ஊழல் மகாசமுத்திரத்தில் சங்கமமான சாதனையை சொல்ல மறந்துவிட்டீர்களே.


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 12, 2025 19:26

ஒரு டார்ச்லைட் குடுங்கப்பா. அவர் மேல வீச


Kulandai kannan
ஆக 12, 2025 19:23

திரையிலும் நிஜத்திலும் சிறப்பாக நடிப்பவர்.


sankaranarayanan
ஆக 12, 2025 18:42

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே... என ஆரம்பித்து சோனியா அம்மாவையும் கலைஞர் அப்பாவையும்தான் இவர் பின்பற்றுவர் அதை அவர் சின்ன வயதிலேயே சொல்லிட்டுவிட்டார்


Rathna
ஆக 12, 2025 16:50

நிழலுக்காக நிஜத்தை தொலைத்தவர். கூடி வாழ்ந்த நபரே தன் பெண்ணை காப்பாற்ற ஓடியது, புள்ளியின் வாழ்க்கை நிஜத்தை சொல்லும்.


KRISHNAN R
ஆக 12, 2025 15:25

நடிப்பு ok... இவர் நிஜம் and நிழல் எப்படி?


Saai Sundharamurthy AVK
ஆக 12, 2025 14:29

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒழுக்கம் இல்லாதவர். இந்து வெறுப்பு கொண்டவர். கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர். உளறல் உபாதை கொண்டவர்.. கர்வம், ஆணவம் கொண்டால் சிவபெருமான் நரகத்திற்கு தான் அனுப்பி வைப்பாராம். இப்படிப் பட்டவரை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் ????


GoK
ஆக 12, 2025 14:21

எங்கே எதில் நடிப்பதை நிறுத்துவது என்று தெரியாதவர்


Kalyanaraman
ஆக 12, 2025 14:13

திரையுலகில் இவ்வளவு பெரிய வரலாற்றை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் கமல் ஒரு எம்பி சீட்டுக்காக சிலர் காலை என்னவென்று சொல்வது. ஒரு ஹீரோ ஜோக்கரானார்.


rasaa
ஆக 12, 2025 14:09

தலைசிறந்த நடிகர். திரைக்கு முன்பும், திரைக்கு பின்பும்.


முக்கிய வீடியோ