உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அற்புத மனிதர் ரஹ்மான்; அவதுாறுகளை பரப்பாதீங்க: ஆடியோ வெளியிட்டார் சாய்ரா பானு

அற்புத மனிதர் ரஹ்மான்; அவதுாறுகளை பரப்பாதீங்க: ஆடியோ வெளியிட்டார் சாய்ரா பானு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ' தயவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர்' என்று விவாக ரத்து அறிவித்துள்ள சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டுள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி இடையிலான 29 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்த நிலையில், விவாக ரத்து அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m05x7eth&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பல விதமான கருத்துக்கள், விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சாய்ரா பானு ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் சாய்ரா பானு பேசுகிறேன். நான் இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். யூடியூபர் மற்றும் தமிழ் மீடியா தயவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர். இந்த உலகில் மிகவும் நல்ல மனிதர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். பிசியான காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் இருக்கிறார். அவரையோ, என் குழந்தைகளையோ தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. விவாகரத்து குறித்து பொய்யான தகவலை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். விரைவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்புவேன். நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Narayanan
நவ 25, 2024 15:40

ஆக விவாகரத்து இல்லை . அதை அறிவியுங்களேன் . சொல்லிவிட்டீர்கள் விவாகரத்து பொய் செய்தி என்று . அதுவரை நன்றி . பிரபலங்கள் இந்த மாதிரி அறிவிப்பு வெளியிடும்போது புதிய தலைமுறையினர் கண்ட கண்ட சின்ன விஷயத்திற்கு எல்லாம் விவாகரத்தை கேட்கிறார்கள் .


Mani . V
நவ 25, 2024 06:02

இல்லை, நான் சிரிக்கவில்லை. சும்மாதான் வாயைப் பொத்தியுள்ளேன்.


Sathyan
நவ 25, 2024 03:17

ரஹ்மான் அற்புத மனிதர் என்றால், அற்புத மனிதர்களை என்னவென்று சொல்லி அழைப்பது. இஸ்லாம் மதப்பித்து ஏறிய மனிதர் இவர்.


கிஜன்
நவ 24, 2024 22:41

நல்ல மனுசன காயப்படுத்தாதீர்கள் ..... திரும்ப சேர்ந்து வாழுங்கள் ... அவர் ஒரு ஞான கிறுக்கன் .... உங்களுக்கு புரியாமல் வேறு யாருக்கு புரியும் ....


Bye Pass
நவ 27, 2024 12:56

மீண்டும் சேர்ந்து வாழ நிறைய சடங்குகள் உண்டே


AMLA ASOKAN
நவ 24, 2024 21:05

சாய்ரா பானு தனக்கு உடல்நிலை சரியில்லாததாலும் , மற்றும் மும்பையில் தான் அதற்கு உகந்த சிகிட்சை கிடைக்கும் என்ற காரணத்தினாலும் , சென்னையை விட்டு , கணவரை விட்டு சென்று விட்டார் . இந்நிலையிலும் தன் கணவர் இசையே கதி என்று அலைவதால் , தன்னை கவனிக்கவே இல்லை என்ற ஆதங்கத்தில் தான் அவரை விட்டு பிரிவதாக ஒரு செய்தி வெளியிட்டார் . விவாகரத்து என்ற வார்த்தையே அதில் இடம் பெறவில்லை . பின்னர் அது குறித்து இன்று தெளிவான விளக்கத்தை தானே பேசி விட்டார் . மறுபடியும் சென்னை திரும்பி வந்து கணவருடன் வாழப்போவதாகவும் தெரிவித்துள்ளார் . நமது வாழ்த்துக்கள் .


Ramesh Sargam
நவ 24, 2024 20:44

அற்புத மனிதர் என்று கூறும் நீங்கள் ஏன் அவரை விவாகரத்து செய்கிறீர்கள்? இப்படி கேட்டால் அது தனிப்பட்ட குடும்ப விஷயம் என்று கூறுவீர்கள். தனிப்பட்ட குடும்ப விஷயம் எப்படி வெளி உலகத்தினருக்கு தெரியவந்தது?


நிக்கோல்தாம்சன்
நவ 24, 2024 20:17

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு ? தமிழன் தமிழ் என்று கூறுபவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டினை மறந்து விட்டது எதற்கு?


rama adhavan
நவ 24, 2024 19:04

தினசரி இவர் வெட்டி குடும்ப செய்தி நமக்கு எதற்கு? இவர் என்ன செய்தார் தமிழகத்திற்கு? சுமார் ஆயிரத்து ஐன்னுரு கோடி சொத்து உள்ளதாக வலைத்தளங்களில் தகவல்.இவர் போல் தமிழகத்தில் இரு கோடி குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு கஷ்டம், தீராத குழப்பம் உள்ளது.


kantharvan
நவ 24, 2024 20:20

எத்தனையோ நற்காரியங்களுக்கு இசைக்கச்சேரி நடத்தி பெரும் நன்கொடையளித்த தயாள மனிதர். சென்னையில் திறமையுள்ள எத்தனையோ பேரை உருவாக்கியவர் லிடியன் , அனிருத் எல்லாம் ரஹ்மானின் மாணவர்கள் என்பதையும் மறவாதீர் ???


பேசும் தமிழன்
நவ 24, 2024 17:02

அற்புதமான மனிதர்.... அப்போ என்ன ம...... க்கு விவாகரத்து செய்தீர்கள் ???.... பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.


kantharvan
நவ 24, 2024 20:17

பாரதி அற்புதமான மனிதர்தான்.செல்லம்மாவிற்கு சாயிரா அளவிற்கு சுதந்திரம் இருந்திருந்தால்...??


Sathyanarayanan Sathyasekaren
நவ 24, 2024 22:29

கந்தர்வன் யாருடன் யாரை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்?உங்களுக்கு இந்த மதம் மாறிய, காப்பியடிக்கும் டெக்னாலஜி திருடனை பிடித்தால் அவரை பாராட்டுங்கள் , மகாகவியுடன் ஒப்பிடாதீர்கள். ஹிந்து ராகங்களை , பாடல்களை கோப்பி அடித்து இசை அமைப்பாராம், திருநீறு அணிந்து வீட்டிற்கு வந்தால் உள்ளே விடமாட்டார்களாம்.


நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 08:21

காந்தர்வன் உங்களது மதத்திலே தலாக் என்றொரு வார்த்தை இருக்கையில் எதற்கு நாடக பாணி ?


வாய்மையே வெல்லும்
நவ 24, 2024 16:58

இலவசமாக எழுநூற்றி ஐம்பது கோடி கிடைக்குது . இனிக்கத்தானே செய்யும் . இந்த உருட்டும் செல்லுபடியாகும்


புதிய வீடியோ