உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

ஆமதாத்பாத்: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும்'' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசினார்.காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய நினைவிடத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பை வேண்டுமென்றே எதிர்க்கிறார். நாட்டின் மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கை அவர்கள் வெளியிட விரும்பவில்லை. தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் பார்லிமென்டில் பிரதமர் மோடியிடம் கேட்டு இருந்தேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும். தெலுங்கானா என்ன செய்ததோ, அதை நாங்கள் நாடு முழுவதும் செய்யப் போகிறோம். வக்ப் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல். வக்ப் திருத்த சட்ட மசோதா கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற பிற சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஏப் 10, 2025 14:29

தெலங்கானாவில் உங்க கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 80 சதவீதம் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையினர் என கண்டுபிடித்துள்ளது. ஆனால் உங்கள் சாய்ஸ்சான முதல்வர் மற்றும் மெஜாரிட்டி அமைச்சர்கள் முன்னேறிய சமுதாயத்தினர். இதுக்கு எதுக்கு கணக்கெடுப்பு?


Kasimani Baskaran
ஏப் 10, 2025 04:07

மக்கள் தொகைக்கு தகுந்தது போல தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்றால் மட்டும் நாட் ஓகே. ஜாதிவாரியாக கணக்கெடுத்தால் எப்படி ஜெயிக்க முடியும் என்பதை அந்த ஆலோசகர் இல்லாமலேயே ஜெயிக்கலாம்...


vadivelu
ஏப் 09, 2025 23:27

தமிழ் நாட்டில் எடுத்து விட்டால், மொழி வாரி மக்கள் தொகை தெரிந்து விடும். சாதீயை ஒழிப்பதாக கூறுவது பொய்யாகி விடும். மிக குறைவாக உள்ள சாதிகளுக்கு மைனாரிட்டி அந்தஸ்து கொடுக்க வேண்டி வரும் , பரவாயில்லையா . அதற்கு பதிலாக .... அடிப்படியில் எடுத்து அந்தந்த மக்களுக்கு ஏற்றார் போல் வாக்குகளுக்கு பணம் கொடுக்க ஏதுவாக இருக்கும்.


nagendhiran
ஏப் 09, 2025 22:15

ஜாதிவாரி கணக்கு எடுப்பு வேண்டும்? அனால் தொகுதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம்?


Nagarajan D
ஏப் 09, 2025 21:42

சரி எங்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம். உங்களுக்கு என்ன எடுக்கணும்... நீங்க ஒரு பார்ஸியின் பேரன் உங்க அம்மா ஒரு கிறிஸ்துவர் ஆனால் உன்கொள்ளுப்பாட்டன் தன்னை காஷ்மீர் ப்ரஹ்மணன் என்று திரித்து தன்னை ஒரு இஸ்லாமியராகவே நினைத்து வாழ்ந்தவர்... உங்களை எந்த ஜாதியில் அல்லது மதத்தில் சேர்க்கமுடியும்


GMM
ஏப் 09, 2025 21:06

சாதி இட ஒதுக்கீடு இலக்கு மாற்றி, வாக்கு வங்கி உருவாக்கியது. பலன் பெற வேண்டிய சாதியை காங்கிரஸ் பாழ் படுத்தி விட்டது. மீண்டும் சாதி கணக்கெடுப்புக்கு முன் ஒரே சாதி திருமணம் கட்டாயம். மத மாற்ற,100 சதவீதம் தடை நாடு முழுவதும் தேவை. ராகுல் தகுதியை வெளியிட வேண்டும். நீட் ஒழிப்பு, சாதி கணக்கெடுப்பு, மாநில சுயாட்சி, கவர்னர் தேவையில்லை போன்ற விதண்டா வாதங்களுக்கு மூல காரணம் மக்கள் நல கொள்கை இல்லாத அரசியல் கட்சிகள் .


G Mahalingam
ஏப் 09, 2025 21:27

சாதி கணக்கெடுப்பு எடுத்து சாதிக்குள் சண்டையை உருவாக்கி காங்கிரஸ் குளிர்காய பார்க்கிறது.‌ வன்னியருக்கு 10.5 சதவீதம் ஒதுக்கியவுடன் மற்ற சாதிகள் வன்னியரை எதிரியாக பார்த்தனர்.‌ நல்ல வேலை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. சோனியா காங்கிரஸ் நாட்டுக்கு கேடு.சாதி இல்லா சமுகத்தை உருவாக்க பாடுபடுவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை