உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசை ராகுல் வழிநடத்துவது பேரபாயம்: வானதி

காங்கிரசை ராகுல் வழிநடத்துவது பேரபாயம்: வானதி

சென்னை:பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை:யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் தி.மு.க., நடத்திய போராட்டத்தில் பேசிய, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா; நாட்டின் அனைத்து மொழி, கலாசாரம், வரலாறுகளை மதிக்க வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்., தன் கருத்தான ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி என்பதை அடைய அரசியலமைப்பை தாக்குகிறது' எனப் பேசியுள்ளார்.யார் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்றனர், யார் மாநிலங்களை சமமாக நடத்துகின்றனர், யார் கலாசாரம், உரிமைகளை மதித்து நாட்டை இணைக்கின்றனர் என்பதை மக்கள் அறிவர். பிரிவினை பேசும் தி.மு.க.,வையும், அந்த வழியில் பயணிக்கும் ராகுலையும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரிவினை சித்தாந்த்தை பேசும் ராகுல், காங்கிரசை வழிநடத்துவது பேரபாயம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி