உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடத்தல் கும்பலை விசாரிக்க 22 இடங்களில் சோதனை

கடத்தல் கும்பலை விசாரிக்க 22 இடங்களில் சோதனை

புதுடில்லி, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் கும்பலை பிடிக்கும் வகையில் நாடு முழுதும், 22 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நம் நாட்டு இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, அங்கு அவர்களை இணைய மோசடியில் ஈடுபடும் போலி கால்சென்டர்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது.இதற்கென தனியாக குழு அமைத்து மோசடி நபர்கள் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்து வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வதாக பீஹார் மாநிலம் கோபால் கஞ்ச் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தொடர்புடைய மோசடி நபர்களை பிடிக்கும் வகையில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீசார் உதவியுடன் பீஹார், உ.பி., உட்பட ஆறு மாநிலங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். டில்லி உட்பட 22 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ