உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பாதைகள் மின்மயமாக்கல் 97 சதவீதம் நிறைவு

ரயில் பாதைகள் மின்மயமாக்கல் 97 சதவீதம் நிறைவு

சென்னை: ரயில்வேயில் அகலப்பாதை திட்டங்களை, முழுமையாக மின்மயமாக்கும் பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. மின்மயமாக்குதல் திட்டம் வாயிலாக, எரி பொருள் செலவு குறைகிற து. தெற்கு ரயில்வேயிலும், ரயில் பாதைகள் மின்மயமாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரதான வழித்தடங்களில் உள்ள ரயில் பாதைகளில், மின்மயமாக்கல் முடிந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவு குறைக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயின் 5087 கி.மீ., பாதையில், 97 சதவீத பணிகள் முடிந்துள்ளன. சில பாதைகளில் மின்மயமாக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. குறிப்பாக, திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மின்மயமாக்கும் பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடியும். ஊட்டி மலை ரயில், உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக இருப்பதால் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப் படாது. எனவே, தெற்கு ரயில்வேயில், ஊட்டி மலை ரயில் பாதை தவிர, மற்ற அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்கும் பணிகள், நடப்பு நிதியாண்டுக்குள் முடிக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை