உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே லோகோ பைலட் தேர்வு; தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு

ரயில்வே லோகோ பைலட் தேர்வு; தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இறுதி கட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறால், ரயில்வே லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.ரயில்வே தேர்வு வாரியத்தால், லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான சி.பி.டி., தேர்வு, நேற்று நடப்பதாக இருந்தது. தமிழக தேர்வர்களுக்கு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அதை மாற்ற கோரிக்கைகள் விடப்பட்டன. ஆனால், தேர்வு மையங்களை, உடனடியாக தமிழகத்தில் வழங்க முடியாது என, ரயில்வே மறுத்து விட்டது.இந்நிலையில், நேற்று நடப்பதாக இருந்த தேர்வு, தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக, ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்தது. தேர்வர்களுக்கு இந்த தகவல், தேர்வு மையங்களுக்கு சென்ற பின்னரே கிடைத்தது. இதனால், தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தேர்வர்கள் செலவு செய்த தொகையை, இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும், அறிவிக்கப்பட உள்ள தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்க வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மார் 20, 2025 11:38

இதுபோன்ற மத்திய பாஜக அரசின் தவறான செயல்பாடுகளுக்கு கூட தமிழக பாஜகவினர் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது அவர்களுடைய அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!


अप्पावी
மார் 20, 2025 10:54

எங்கேன்னு சொல்லுங்க. போய் சாட்டையாலடிச்சுப்பாரு.


Rangarajan Cv
மார் 20, 2025 10:53

If TN candidates are asked to appear in Hyderabad or other outside places for exams, who appeared in TN or no centres in TN?


globetech engineers airport project
மார் 20, 2025 10:49

இங்குள்ள பிஜேபி இதைப் பற்றி வாய் திறக்கவில்லை ஏன்?. ஒரு தலைவர் கூட வாய்ல திறக்கவில்லை. இதை மற்றவர்கள் செய்து இருந்து இருந்தால் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்த இருக்கும். இப்ப " திருடனுக்கு தேள் கொட்டிய போல இருக்கனும்"


பாமரன்
மார் 20, 2025 10:28

பின்ன என்னாங்கய்யா.. தொலைதூரத்தில் சென்டர் போட்டா எக்சாம் எழுத வரமாட்டீங்கன்னு பார்த்தா... நீங்க பாட்டுக்கு கும்பலா வந்து நிக்கறீங்க...அதான் ...


Sampath Kumar
மார் 20, 2025 08:51

ஹிந்தியன் ரயில்வே அப்படிதான் இருக்கும்


अप्पावी
மார் 20, 2025 07:45

அடடே... தொழில்நுட்பக் கோளாறு கடைசி நிமிஷத்தில் தான் கண்டு புடிச்சாங்களா? இந்தில படிச்சிட்டு கம்பியூட்டர்களை இயக்கறாங்க. இதுக்கு எம்.பி.ஏ படிச்சிட்டு ஒரு அமைச்சர்.


சமீபத்திய செய்தி