உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம் ரயில்வே அமைச்சர் தகவல்

துாத்துக்குடி - மதுரை ரயில் பாதை வேண்டாம் என தமிழக அரசு கடிதம் ரயில்வே அமைச்சர் தகவல்

சென்னை:“துாத்துக்குடி -- மதுரை புதிய ரயில் திட்டம் வேண்டாம் எனக் கூறி, தமிழக அரசிடம் இருந்து, எழுத்துப்பூர்வமான கடிதம் வந்துள்ளது. எனவே, அத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது,” என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 'அம்ரித் பாரத் 2.0' படுக்கை வசதி மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி ரயில் பெட்டிகளையும், சுற்றுலா பயணியருக்கான பிரத்யேக பெட்டிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

நல்ல வரவேற்பு

பின்னர், அவர் அளித்த பேட்டி:நாடு முழுதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஏழை, எளிய மக்களும், 'வந்தே பாரத்' ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, குறைந்த கட்டணத்தில், 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதற்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 'அம்ரித் பாரத் 1.0' திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் கிடைத்த அனுபவத்தின்படி, தற்போது, 'அம்ரித் பாரத் 2.0' திட்டத்தின் கீழ், வந்தே பாரத் ரயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.நீண்ட துார பயணியர் வசதிக்காக, இருக்கைகளில் அதிக தடிமனான குஷன்கள், பயணியரின் உடைமைகளை வைப்பதற்காக, அலுமினியத்தால் செய்யப்பட்ட அறைகள், பயணத்தின்போது அதிர்வு கள் ஏற்படாமல் இருக்க நவீன தானியங்கி 'கப்ளர்' கள், 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாஷ்பேசின்'கள், ஆபத்து ஏற்படும்போது பயணியர், ரயில் கார்டுடன் பேசுவதற்கான வசதி உள்ளிட்ட 12 வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 அம்ரித் ரயில்களை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.துாத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு, புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இத்திட்டம் வேண்டாம் எனக்கூறி, தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் வந்துள்ளது. அதனால், இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுள்ளது.ரயில்வே துறை சார்பில், தமிழகத்துக்கு செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமை யாக நிறைவு பெற்று, அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்துள்ளன. விரைவில் அந்த பாலம் திறந்து வைக்கப்படும். ஜம்மு -- காஷ்மீர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த பின்னர், அங்கு ரயில் இயக்கப்படும்.

விபத்து தவிர்ப்பு

ரயில் விபத்தை தடுக்கும், 'கவச்' கருவிகள் இதுவரை, 10,000 ரயில் இன்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை, கும்மிடிப்பூண்டி அருகே பாயின்ட் கருவியில் இருந்து போல்ட் கழற்றப்பட்டதை முன்கூட்டியே கண்டறிந்ததால், விபத்து தவிர்க்கப்பட்டது.மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பதற்காக, தற்போது புதிய வடிவமைப்பில் இத்தகைய போல்ட்கள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன; யாராலும் அகற்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், புதுவாயல் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில், ரயில் சக்கரங்கள் தயாரிப்பு பணிகளை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பாராவ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஜன 11, 2025 12:36

ஓ அதனால் தான் இந்த திட்டம் வந்தால் பதவியில் இருக்கா மாட்டேன் என்று கூறுகிறாரோ. மதுரை தூத்துக்குடி ரயில் திட்டம் அம்போ. நீங்கள் அந்த கட்சியில் இன்னமும் நீடிக்கிறீர்களா? இந்த அறிவுப்பு உங்களுக்கு தான்.


M Ramachandran
ஜன 11, 2025 12:32

திராவிட காட்சிகள்ள ஆட்சியில் தமிழ் நாட்டின் ரயில் திட்டங்களுக்கு முநைய்யப்பு காட்டாததால் கேராளா காரண் லட்டு மாதிரி தன் நாட்டிற்கு முனைப்பு காட்டி பெற்று கொள்கிறான். கோவை பொள்ளாச்சி அவன் கையில் மாட்டிகிட்டு வர விடா மல் தடுக்கிறான். இந்த கட்சியை யின் MP க்கள் மற்றும் அதன் ஜால்றா பிளாஸ்டிக் சேர் புகழ் கட்சி, சைகோ கட்சி, கம்மிகள் இதெல்லாம் பாராளு மன்ற ஓசி கான்டீன் வடைக்கும் அல்வா விற்கும் அல்லாடும் கூட்டம். இலங்கைய்ய சென்று ராஜ பகைத்தேர் கொடுத்த பிரியாணி விருந்தை பாராட்டி அதற்க்கு கைமாறாக கேட்ட இடத்தில் கையெழுத்திட்டு பண முடிப்புடன் வந்த கோமாளிகள். தமிழ் நாட்டுக்கு நலன் ???? பழைய காங்கரஸ் ஆட்சியில் OV அழகேசன் துணை அமைச்சராக இருந்த போது தாம்பரம் விழுப்புரம் ரயில் இனைப்பு மின் மாயா மாக்க பட்டது. அதன் பின் வந்த பாமா க கட்சியை சேர்ந்த மத்திய ரயில்வேர் இணையய அமைச்சராக இருந்த OS மூர்த்தி மற்றும் வேலு இருவரும் அவர் அவர்களால் முடிந்த தமிழக ரயில் முடிந்ததை செய்தார்கள். இன்று முக்கியமா அகல் பாதை திட்டங்களுக்கும் கன்னையா குமரிவரை இரட்டைய வழி பாதைக்கும் காரண கர்த்தா. அதே தீ மு க்க மத்திய அமைச்சராக இருந்த போது தமிழக திட்டங்களை கெடுத்தும் அப்பபோது கப்பல் துறையாக இருந்த மற்றும் நிதியமைச்சகத்தில் துணையய அமைச்சர் பதவி வகித்த மற்றொரு தீ மு கா புள்ளி. உட்ளெள்ளாம் விஷம். சுய நல வாதிகள். மக்கள் மௌடீகமாக இருந்தால் கெடுப்பவனை நொந்து பயனில்லை. அவர்கலிய்ய தேர்ந்தெடுத்த ... மூட்டைகள் காரணம்


Dharmavaan
ஜன 11, 2025 07:46

தூத்துக்குடி பாதை வேண்டாம் என்று சுடலை நிறுத்த காரணம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும்


karthik
ஜன 11, 2025 12:29

தனியார் பேருந்து நிறுவனம் மற்றும் புதிய ரயில் பாதையில் இவர்களுக்கு வேண்டியவர்கள் நிலங்கள் இருக்கலாம்.


Ray
ஜன 11, 2025 20:15

ஒரு திட்டம் வேண்டான்னு சொன்னதால நிறுத்தினீங்க வேண்டும்னு சொன்ன திட்டத்துக்கெல்லாம் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? பிறர்மீது பழி போடறது பிறரை தூத்தறது மட்டும்தானா? சென்னை வந்த ரயில் மந்திரி முதல்வரை சந்தித்து அல்லது பொது மேலாளரை அனுப்பி எங்கே நில எடுப்பு தாமதம்னு நடவடிக்கை எடுக்கலாமே என்ன கூச்சம் அல்லது ஈகோ? வாங்க சார் உக்காந்து பேசுவோம் ஒண்ணு கூடி முடிப்போம் என்பதே நல்ல நிர்வாகிகளின் வழி


Ganapathy Subramanian
ஜன 13, 2025 16:02

ray - வேண்டாம் என்று கடிதம் எழுதிய பிறகு என்ன உட்கார்ந்து பேசுவது. கொடுத்த காசுக்கு மேலே கூவுவதேன் நண்பரே?


Dharmavaan
ஜன 11, 2025 07:42

எம்ஜிஆர் பாட்டு பொருந்தும் திட்ட போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது .சட்டம் போடும் கூட்டம் தடுக்குது. போல்ட் வடிவமை மாற்றினால் வேறு ஒன்றை தீவிரவாத கூட்டம் கண்டு பிடிக்கிறது


சமீபத்திய செய்தி